இளசுகளின் பைபிள்!



“The Naked Roommate,” by Harlan Cohen  
கல்லூரி செல்பவர்கள் வகுப்புகளைத் தாண்டி கல்லூரி வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள், நண்பர்களை அடையாளம் காண்பது, விடுதி அறை தூய்மை, துணிதுவைப்பது என ஆல் இன் ஆலாக அனைத்துக்கும் வழிகாட்டும் நூல் இது.
 
“Outliers: The Story of Success,” by Malcolm Gladwell  
10 ஆயிரம் மணிநேரங்களில் கிராண்ட் மாஸ்டர் ஆவது எப்படி என சுவாரசியமாக விவரிக்கிறார் கிளாட்வெல்.
 
“The Idiot,” by Elif Batuman  
துருக்கி அகதி குடும்பத்தைச் சேர்ந்த செலின் ஹார்வர்ட் பல்கலையில் இணைகிறாள். அங்கு நட்பாகும் இவான், ஸ்வெட்லானா ஆகியோரின் மூலம் தனது வாழ்வை அடையாளம் காண்பதே நாவலின் கதை.
 
“Exit West,” by Mohsin Hamid  
போர் தேசத்திலிருந்து தப்பி அகதியாகச் செல்லும் சயீத்-நாடியா எனும் இளம் காதல்ஜோடியின் போராட்டமே கதை.
 
“This is Water,” by David Foster Wallace  
வாழ்வைத் தீர்மானிக்கும் கல்லூரிப் பருவத்தில் மதிப்பெண் பின்னால் ஓடாமல் வெல்ல இந்நூலிலுள்ள வாலஸின் அறிவுரைகள் உதவும்.