பெண்களுக்கு ஆயுசு அதிகம்!



நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDC) தகவல்படி, உலகளவில் பெண்களுக்கு 5-7 ஆண்டுகள் ஆயுள் அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், ஆண் களின் வன்முறை மனோபாவம், கொலை, தற்கொலை, விபத்து, இதயநோய்கள்தான். முக்கிய மான காரணம், மரபணுக்கள்தான்.  

ஆண்களின் செல்களிலுள்ள மைட்டோகாண்ட்ரியாவின் வேகம் அதிகம் என்பதால் முதிர்ச்சியடையும் தன்மை ஓப்பீட்டளவில் பெண்களைவிட அதிகம். செக்ஸ் குரோமோசோம் களிலும் வித்தியாசம் உண்டு. ஆண்களின்  செல்லில்  ஒரேயொரு எக்ஸ் குரோமோசோம் இருப்பது தான் நோய்கள் அதிகரிக்க காரணம்.  பெண்களின் உடலில் இரண்டு எக்ஸ்குரோசோம்கள் உண்டு.  

பெண்களுக்கு மெனோபாஸ் காலகட்டத்திற்கு பிறகு இதயநோய்கள் வரும். ஆனால் ஆண்களுக்கு இதயநோய்கள் இளம்வயதிலேயே தாக்க, டெஸ் டோஸ்ட்ரோன் ஹார் மோனே காரணம். ஆண்களின் நோயெதிர்ப்பு சக்தியும் (லிம்போசைட்ஸ்) பெண் களின் உடலை விட வேகமாக முதிர்ச்சியடைந்து இறப் பதால் ஆண்களின் வாழ்நாள் பாதிக்கப்படுகிறது.

சிவப் பணுக்களும் ஆண்களுக்கு இம் முறையில் முதிர்ச்சியடைகிறது. பொதுவாக ஆண்களுக்கு வாழ்நாள் குறைய காரணம், ரிஸ்க்குகளை ரஸ்காக எடுத்து சொதப்பி சமாதிக்கு சென்றுசேர்வதுதான். எனவே கால்குலேட்டட் ரிஸ்க் எடுங்க ப்ரோ!