முத்தாரம் Miniவிலங்கு களின் கோணத்தில் படம்பிடிப்பது என்ன பயன் களைத் தரும் என நினைக்கிறீர்கள்?

நாம் இதுவரை துருக்கி கரடி, மரங்களிலுள்ள சிம்பன்ஸி பற்றி அறிந்தவை அனைத்தும் அவை பற்றி மட்டுமே. ஆனால் உலகைப் பற்றிய அவற்றின் பார்வை நமக்குத் தெரியாது. இன்றைய டெக்னாலஜியைப் பயன்படுத்தி அவற்றை பின்தொடர்ந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் Animals With Cameras  நிகழ்ச்சி கான்செப்ட். இதன்மூலம் அழியும் நிலையிலுள்ள உயிரிகளை பாதுகாக்க முடியும்.

உங்களது தேடுதலின் சுவாரசியங்களைக் கூறுங்களேன்?

அட்லாண்டிக் கடலில் பெண் மீன் ஒன்றைத் துரத்தியபடி கேமராக்களோடு சென்ற அனுபவம் மறக்கமுடியாது. அந்தப் பெண்மீனின் வயிற்றில் பிறக்கவிருக்கும் மீன்கள் வெளிவரத் துடித்ததை எங்கள் கண்ணால் பார்த்தோம். உணவுதேடி ஆண் மீன்களும், பெண் மீன்களும் சென்றதைப் பின்தொடர்ந்தபோது நடந்த நிகழ்வு இது.எந்த விலங்கு சிறந்த ஒளிப் பதிவாளர் என்பீர்கள்?

சீட்டா.  பிற விலங்குகள் எப்படியோ சீட்டாவை நிலையாக இருக்கையில் படம்பிடிப்பது இரையை தாக்கிப்பிடிக்க காத்திருக்கும்போதுதான் சாத்தியம். இதனை கிராபிக்ஸில் சரிசெய்ய முடியாது.

-கார்டன் புச்னன், பிபிசி தொகுப்பாளர்.