சென்னை சீக்ரெட்ஸ்



ஆங்கிலேயரின் கோட்டை

சாந்ேதாமில் போர்த்துக்கீசியர்கள் இரட்டைக்குழல் துப்பாக்கியாக வணிகத்தையும் மதத்தையும் பரப்பிக் கொண்டிருந்தனர். டச்சுக்காரர்களுடன் இருந்த வணிகப் போட்டியாலும், அவர்களை ஆங்கிலேயர்களும்  எதிர்த்து  நின்றதாலும் சாந்தோமிலிருந்த போர்த்துக் கீசியர்கள்  ஆங்கிலேயர்களுக்கு  ரெட்   கார்ப்பெட்   வரவேற்பு  கொடுத்தனர். அப்போது  துபாஷி (இருமொழி வல்லுநர்) ஆக இருந்த பெரி  திம்மப்பா பிரான்சிஸ் டேக்கு
உதவினார்.

அன்று  இந்தப் பகுதி முழுவதும் விஜயநகர  மன்னரின்  பிரதிநிதியான தர்மல வெங்காடாத்ரியின் கீழ் செயல்பட்டு வந்தது. தலை நகரம் வந்தவாசி. அன்று, பூவிருந்தவல்லியின் நாயக்கரான இவரது சகோதரர் ஐயப்பா கரையோரப் பாதுகாப்புக்கு பொறுப்பாளர்.

மதராசபட்டிணம் வடக்கே ஆங்கிலேயர் கோட்டை கட்டிக் கொள்ளலாம் என அனுமதித்தது இவர்தான். ஆக, மதராசபட்டிணம்  என்ற ஒரு கிராமம் ஏற்கனவே அங்கே இருந்ததும் அங்கே கோட்டை கட்டிக் கொள்ளலாம் என்பதும் தெளிவாகிறது. சென்னப்பட்டிணம் எப்படி வந்தது?

பிகே