கீமோதெரபி அவசியமா?



ஐந்து பில்லியன் கீமோதெரபி சந்தையை அசைத்துப் பார்த்த கேள்வி இதுதான். கேட்டவர் இந்தியாவில் பிறந்த மருத்துவர் அர்ஜுன் ஜோஷி. கல்லூரி நாட்களில் எழுத்தாளராக இருந்தவர் தாயின் வற்புறுத்தலால் மருத்துவம் படிக்கத் தொடங்கி இன்று கழுத்து, தலை ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்  வல்லுநராக  ஜார்ஜ்  வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

“புற்றுநோய் என்றதும் இதுவரை சேமித்த குண்டுமணி தங்கம் உட்பட சுரண்டி சிகிச்சை தேடி ஓட அவசியமில்லை. புற்றுநோய்களுக்கு ஏற்ப சிகிச்சையும் மாறும்” என்று அதிர வைக்கிறார் அர்ஜுன் ஜோஷி. பால்வினையால் ஏற்படும் புற்றுநோய்களுக்கு கீமோதெரபி தராமல் சிகிச்சையளிக்கிறார் அர்ஜுன். கடந்தாண்டு ஜோஷி பத்தொன்பது நோயாளிகளிடம் செய்த ஆய்வுப்படி, கீமோதெரபி செய்ததில் ஒருவர் இறந்துபோக, மூவருக்கு குணமானது.

தொடர்ந்த ஆய்வில் இருபதில் பதினேழு பேருக்கு கீமோ இன்றியே புற்றுநோய் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் தெரிந்தது. ஸ்டீவ் ஹெண்ட்ரிக்ஸ் என்ற திசு புற்றுநோய் நோயாளியை ஆபரேஷன் மற்றும் கீமோ மூலம் காப்பாற்றியுள்ளார் அர்ஜுன். அனைத்து புற்றுநோய்களுக்கும்
கீமோதெரபி அவசியமா? என்ற கேள்வியை தன் ஆய்வுகள் மூலம் எழுப்பியுள்ளார் அர்ஜுன்.