அன்டார்டிகா சாலட்!



அன்டார்டிகாவில் விளைவித்த வெள்ளரிக்காய், கீரைகளை ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் பறித்து வந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். “தோட்டத்திலிருந்து பறித்து வந்தது போல புத்துணர்ச்சியான சுவை” என்கிறார் ஆராய்ச்சியாளர் பெர்ன்ஹார்ட் கிராப். அன்டார்டிகாவில் அமைக்கப்பட்டுள்ள நியூமேயர் ஸ்டேஷனில்தான் கீரைகளை, பழங்களை விளைவித்திருக்கிறார்கள்.

நானூறு மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள EDEB ISS என்ற பசுமைவீட்டில் காய்கறிகளை நுட்பமாக விதைத்து அறுவடை செய்திருக்கிறது ஆராய்ச்சியாளர்கள் குழு. எதற்கு இந்த ஆராய்ச்சி, எதிர்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட கோள்களுக்கு சென்றால் விவசாயம் செய்தால்தானே உயிர்பிழைக்க முடியும்? அதற்கான ஒத்திகைதான் இது.