முகமது வல்லி மூசா,ஆப்ரே மேயர்



பசுமை பேச்சாளர்கள்  50

தென் ஆப்பிரிக்காவின் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக செயல்பட்ட முகமது, கானுயிர்களைப் பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்க திட்டம் தீட்டி செயல்பட்டவர். எஸ்கோம் எனும் அரசின் மின்சார நிறுவனத்தின் தலைவராக செயல்பட்ட முகமது, 21 ஆம் நூற்றாண்டின் பொருளாதாரத்தை தாவரங்கள்தான் தீர்மானிக்கும் என்று மாநாட்டில் உரையாற்றிய பசுமை ஆளுமை.

1971 ஆம் ஆண்டு தன் பதினான்கு வயதில் குடியரசு தினத்தன்று Die sem என்ற தேசியகீதத்தை பாட மறுத்து தேசியக்கொடியை தீக்கிரையாக்கிய புரட்சி  குணத்திலேயே அவரது விடுதலை வேட்கையை புரிந்துகொள்ளலாம்.

விட்வாட்டர்ஸ்‌ராண்ட்  என்ற பல்கலையில் படிக்க அனுமதி கிடைக்காததால் டர்பன் பல்கலையில் கணிதமும் இயற்பியலும் பயின்ற ஆண்டு 1978. தன் சகோதரரின் உதவியால் 1976 ஆம் ஆண்டு பிசிஎம் என்ற கட்சியில் இணைந்து அரசியலுக்கு வந்தார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்த முகமது வல்லி மூசா, ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி கட்சியில் இணைந்தார். 2004 ஆம் ஆண்டுவரை சுற்றுச்சூழல்துறை அமைச்சராக செயல்பட்ட முகமது, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டு அளவையும், பாதிப்பு அளவையும் குறைக்க பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல் பாட்டுக்கு கொண்டுவந்தார். வேர்ல்ட் கன்சர்வேஷன் யூனியனின்(IUCN) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுள்ளார் முகமது.

ஆப்ரே மேயர்

உலகநாடுகள் வணிகத்தினால் ஏற்படும் சூழல் கேடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் தென் ஆப்பிரிக்க இசைக்கலைஞன் ஆப்ரே மேயர். “கியோட்டோ ஒப்பந்தம், மிகச்சில பணக்கார நாடுகளுக்கு மட்டுமே பொருந்துகிறது” என்கிறார் மேயர். வளர்ச்சியடைந்த, ஏழை நாடுகள் வெளியிடும் மாசுபடுதலுக்கேற்ப விதிகளை மாற்றி வணிகத்தை மேற்கொள்ளவேண்டும் என்பது இவரின் கருத்து.

1990 ஆம் ஆண்டு குளோபல் காமன்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பை தொடங்கிய ஆப்ரே மேயர், முன்னாள் பசுமைக்கட்சி உறுப்பினர். இங்கிலாந்தின் யார்க்‌ஷயரில் பிறந்த ஆப்ரே மேயர், தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் வளர்ந்தார்.

1988 ஆம் ஆண்டு சிப்கோ மெண்டிஸ் என்ற பிரேசில் தன்னார்வலர், மழைக்காடுகளைக் காக்கப் போராடி படுகொலை செய்யப்பட, அன்றிலிருந்து ஆப்ரே மேயர் பசுமை இல்ல வாயுக்களுக்கு எதிராக பல்வேறு இயற்கை சார்ந்த அமைப்பு களுடன் இணைந்து போராடி வருகிறார்.

ச.அன்பரசு