ராக்கெட்மேன் குழு!



அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திக்கவிருக்கும் கிம் ஜாங் உன்னை ஒழுங்குபடுத்தும் டீம் இதுதான்.

HYON SONG WOL
கிம் கட்சியின் புகழ்பெற்ற பெண்மணி. கிம்மின் முன்னாள் தோழியான இவர் பின்னர் பல்வேறு வணிக ஒப்பந்தங்கள், கலாசார நிகழ்வுகளுக்கு வருகை தந்து மக்களுக்கு பழகிய முகமாக மாறியுள்ளார்.

RI PYONG CHOL
கிம் ஜாங் உன் மனைவியின் தாத்தா அல்லது மாமா உறவு. கிம்மின் அணு  ஆயுதங்களுக்கான சாவியை வைத்துள்ளவர் இவர்தான். விமானப்படை தலைவராக ட்ரோன் மற்றும் போர்விமானங்களை கையாண்டவர், வடகொரியாவின் அணுஆயுத திட்டங்களுக்கு பொறுப்பு.

RI SU YONG
இந்தியாவின் எல்ஐசி கம்பெனி போல கிம்முக்கு  இவர். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐ.நா திட்ட தூதராக பணியாற்றியவர், கிம்முக்கு பள்ளிப்பருவத்தில் தந்தைபோல பாதுகாத்து வழிகாட்டியவர். பின்னர் வெளியுறவுத்துறை அமைச் சராகப் பணியாற்றி ஆலோசகராகியுள்ளார்.

KIM YO JONG
ட்ரம்பின் மகள் இவாங்கா போல, கிம்முக்கு அவரது சகோதரி கிம்யோ ஜாங். 70 ஆண்டுகளுக்குப் பிறகு தென்கொரியா வில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றபோது கிம்யோ ஜாங் பங்கேற்றார்.