தெரிஞ்சுக்கோங்க! பட்டியல் இனம் உருவானது எப்படி?




காலனியாதிக்க ஆட்சியில் ஆங்கிலேயர்கள் 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று  கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் ஆகியோருக்கான வாக்குரிமை தரும் யோசனையை முன்வைத்தனர். பிரித்தாளும் சூழ்ச்சி என அரசியல் தலைவர்கள் கூறினாலும் 1937 ஆம் ஆண்டு தேர்தல் முதல் பட்டியல் இனத்தவர்கள் முறை அமுலுக்கு வந்தது.
 
ஆதிதிராவிடர்கள், பட்டியல் இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை?  

ஆதிதிராவிடர்கள் எண்ணிக் கையில் முதலிடம் உத்தரப் பிரதேசத்திற்கு (20.5%). மேற்கு வங்கம்(10.1%), பீகார்(8.2%), பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மக்களின் எண்ணிக்கை 20.1 கோடி. பட்டியல் இனத்தவர்களின் மக்கள்தொகையில் மத்தியப்பிரதேசத்திற்கு முதலிடம். குஜராத், ராஜஸ்தான், ஒடிஷா, மகாராஷ்டிரா மாநிலங்களில வசிக்கும் பழங்குடி களின் எண்ணிக்கை 10.45 கோடி.
 
பட்டியல் பழங்குடி இனத்தவர் களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது எப்படி?  

1947 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு இருந்தது. பழங்குடி மனிதரான ஜெய்பால்சிங் முண்டா தங்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோர, 1950 ஆம் ஆண்டு அரசிய லமைப்பு  சட்டத்திலும் பட்டியல் பழங்குடி இனத்தவர்களுக்கான விதிகள் இயற்றப்பட்டன என்கிறார்  வரலாற்று  ஆய்வாளர் ராமச்சந்திர குஹா.