விண்வெளியில் சொகுசு ஹோட்டல்!



விண்வெளிக்கு டூர் சென்று ஓரியன் ஸ்பேனின் ஹோட்டலில் இட்லி சாப்பிட்டுவருவது 2022 ஆம் ஆண்டு நிஜமாக நடக்கவிருக்கிறது. தற்போது விண்வெளிக்குச் செல்ல 20 மில்லியன் என டிக்கெட் வசூலிக்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையத்தின் அருகில் 322 கி.மீ தொலைவில் வட்டப்பாதையில்  அமையவிருக்கும் இந்த ஹோட்டலில் பனிரெண்டு நாட்கள் ட்ரிப்பில் இரண்டுபேர்  தங்குவதற்கான அறைவசதிகள் உண்டு. இங்கு செல்வதற்கு முன்பு இதற்கான மூன்றுமாத பயிற்சியில் பாஸ் ஆவது முக்கியம்.

“மூன்று மாதங்கள் தங்குவதற்கு ஓராண்டிற்கும் மேலான பயிற்சிகளை நாங்கள் அளிக்கிறோம். குறைந்த கட்டணத்தில் அனைத்து மக்களையும் விண்வெளிக்கு அழைத்துச்  செல்வதே எங்களது நோக்கம்” என்கிறார் ஓரியன் ஸ்பேன் நிறுவனத்தின் இயக்குநரான ஃபிராங்க் பங்கர். இதில் தனிநபருக்கு 9.5 மில்லியன் டாலர்கள் கட்டணம்.

ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஒரிஜின், ஆர்பிடல் ஏடிகே ஆகிய நிறுவனங்கள் விண்வெளி டூருக்கான சோதனைகளைச் செய்துவருகின்றன. விரைவில் ஓரியன் ஸ்பேன், மேற்கண்ட நிறுவனங்களோடு  ஒப்பந்தம் செய்து ஹோட்டல் கனவை மக்களுக்கு  சாத்தியமாக்கக் கூடும்.