பிட்ஸ்!




*மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் Always, Never, Completely.
 
*லண்டன் நகரம் 1211 ஆம்  ஆண்டிலிருந்து இங்கிலாந்து ராணிக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்துவதற்கான வாடகையை அவருக்கு செலுத்தி வருகிறது.
 
*காலனிய ஆதிக்க காலகட்டத்தில் பணியாளர்களுக்கும், அடிமைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டதில் முக்கிய ஐட்டம், இறால்.
 
*சிங்கத்தின் பிடரிமயிர் அதன் ஹார்மோன்களின் அதிகரிப் பிற்கேற்ப அடர்த்தியாக வளரும். பெண் சிங்கங்களை ஈர்ப்பதும் இதுவே.
 
*அமெரிக்காவின் எஃப்பிஐ குற்றவாளிகளை அவர்களின் உடலிலுள்ள டாட்டூக்களை வைத்து கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளது.
 
*நியூயார்க்கிலுள்ள Vinnie Pizzaria  என்ற  கடையில் பீட்ஸா ஆர்டர் செய்தால், அதனைக் கொண்டுவரும் பெட்டியையும்  ரொட் டியினால் செய்து அனுப்புகிறார்கள்.
 
*சிட்னியைச் சேர்ந்தவர் தன் வீட்டுக்கு அருகிலுள்ள விமான நிலையத்தில்  ஒலிமாசு பிரச்னைக்காக  ஓராண்டுக்கு 19 ஆயிரத்து 600 புகார்களைத் தந்துள்ளார். தோராயமாக 20 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் புகார்களை அனுப்பியுள்ளார்.