ஆஸ்திரியாவின் புதிய தலைவர்!செபாஸ்டியன் கர்ஸ் ஆஸ்திரியாவின் புதிய இளம் தலைவராகி உள்ளார். ஆஸ்திரிய தேர்தலில் 30% வாக்குகளைப் பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சித்தலை வரான(OVP) செபாஸ்டியன், 27வயதில் வெளியுறவு அமைச்சராக (ஐரோப்பாவிலேயே இளம்வயது) நியமிக்கப்பட்டவர். அமெரிக்கா,சீனா, ரஷ்யா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடு களோடு அணுஉலை டீலிங்குகளை கச்சிதமாக பேசி முடித்த சாமர்த்தியசாலி. மசூதிகளுக்கு வெளிநாட்டு  நிதியுதவி, இஸ்லாமியர்கள் பொது இடத்தில் பர்கா அணிவது  ஆகியவற்றுக்கு தடா போட்டு  ஜெர்மானிய மொழியில் குரான் ஓதச் சொன்ன வலதுசாரி மனிதர் செபாஸ்டியன்.

ஆஸ்திரியாவில் ஐந்து ஆண்டுகள் வசிக்காத அகதிகளுக்கு அரசின் சலுகைகள் கிடையாது என்று சொன்ன பெரிய மனசுக்காரர். 2016 ஆம் ஆண்டு அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழையும் பால்கன் வழியை மூடிய இரும்பு நெஞ்சுக்காரரான செபாஸ்டியனை அதிகாரப் பசி கொண்ட நியோலிபரல் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.