ஹாலோவீன் கொண்டாட்டம்!



அயர்லாந்து  மற்றும்  ஸ்காட்லாந்தைச் சேர்ந்த செல்டிக் மத மக்கள் அகதியாக தங்கள் மரபையும் கொண்டு வந்து சேர்க்க, 1840 ஆண்டுக்குப் பின் ஹாலோவீன் கொண்டாட்டம் அமெரிக்காவில்களை கட்டத்தொடங்கியது. ஹாலோவீன் விழா மாறுவேடத்துடன் டான்ஸ், பழங்கள், முந்திரி, பாதாம் பருப்புகளோடு உணவு என ஜோராக நடைபெறத் தொடங்கியது. 19 ஆம் நூற்றாண்டில் ஹாலோவீன் விழாவுக்கென ஸ்பெஷல் இனிப்புகள் கடைகளில் அறிமுகமாக, பின் அதில் மதுபான பார்ட்டியும் இணைந்தது.

சர்ச்சுகளும், உள்ளூர் நிர்வாகமும் ஹாலோவீன் விழாவினை குடும்ப விழாவாக கடைப்பிடிக்கத் தொடங்க, ஹாலோவீன் விழா  இன்று வடஅமெரிக்கர்களின் பர்ஸைக் கரைக்கும் பல மில்லியன் டாலர் மார்க்கெட்டாகிவிட்டது. குழந்தைகளுக்கு விடுமுறை, கிறிஸ்தவர்களுக்கு புனித நாள், அறுவடை தினம் என சமூகத்திலுள்ளவர்களுக்கு ஒவ்வொரு காரணம் என்றாலும் வட அமெரிக்கர்களின் கலாசாரத்தில் ஹாலோவீனுக்கு மறுக்கமுடியாத இடம் என்றுமுண்டு.