பிட்ஸ் எக்ஸ்பிரஸ்!உலகிலேயே சைக்கிளை 166.94 mph என அதிவேகமாக ஓட்டியவர் ஃப்ரெட் ரோம்பெல்பெர்க். கிராஃபிட்டி எனும் சுவர் ஓவியக்கலை பிலடெல் பியாவில் 1960 ஆம் ஆண்டு தொடங்கியது. சட்டபூர்வமாக கிராஃபிட்டி வரைய உலகெங்கும் 1,650  சுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. குரூப்பாக உள்ள பாண்டா கரடிகளுக்கு Embarrassment என்று பெயர். இன்று படம் தியேட்டருக்கு வரும் முன் ரிலீசாகும் ட்ரெய்லர்கள், முன்பு தியேட்டர்களில் படம் சுபம் போட்டபின்பு திரையிடப்பட்டன. ஒரே சிட்டிங்கில் 86 பென்குயின்களை லன்ச்சாக சாப்பிடும் சமர்த்து துருவக் கரடிகளுக்கு உண்டு.