ஃபேஸ்புக்கின் தந்திரம்!



ஃபேஸ்புக் உலகம் முழுக்க வெற்றிப் புகழ்பெற்றாலும் எப்படி ஜெயித்தது என்பதுதான் சர்ச்சை. Twitter, Tumblr, Path ஆகியவை ஃபேஸ்புக்  புயலிலும் தன்னை தனித்துவமாக காப்பாற்றிக்கொண்டன. ஃபேஸ்புக், இவற்றின் ஸ்பெஷல் அம்சங்களை அப்படியே காப்பிகேட் செய்து ரேஸில் முந்திவிடுகிறது. Foursquare ஆப்பின் ‘செக்இன்’ வசதியை அண்மையில் ஃபேஸ்புக் சுட்டிருக்கிறது. “எங்களோடு இணையுங்கள். இல்லை யெனில் உங்களது வசதிகளை காப்பி அடிப்போம் எனும் ஒருவகை மிரட்டலே இது” என்கிறார் ஃபோர்ஸ்கொயர் ஆப்பின் துணை நிறுவனர். நவீன் செல்லத்துரை.

2016  அமெரிக்க தேர்தலில் ஃபேஸ்புக்கின் பங்கு, சுதந்திர பதிவர்களின் கருத்துக்களை நீக்குவது, அரசுக்கு ஆதரவு என ஃபேஸ்புக் மீதான சர்ச்சைகள் வெகுநீளம். 2013 ஆம் ஆண்டு ஃபேஸ்புக் Onavo என்ற இஸ்‌ரேலிய ஸ்டார்ட் அப்பை வாங்கியது. இதன் மூலம் பயனர்களின் டேட்டா பயன்பாட்டை கணித்து எந்த ஆப்பை பயனர் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறியலாம். இதன் மூலம் புதிய ஆப்களை சமர்த்தாக காப்பி செய்து மார்க்கெட்டை கபளீகரம் செய்கிறது ஃபேஸ்புக். அமேஸான்- டயபர்ஸ். காம், கூகுள்மேப்ஸ்-வேஸ் ஆகியவையும் இதே வழியில் பயணிக்கின்றன.