தலைசிறந்த தந்தைகள்



தேசப்பிதா என நாம் மகாத்மா காந்தியைக் குறிப்பிடு கிறோம். ஒரு தேசத்திற்கு... சில துறைகளுக்கு... பல புதிய படைப்புகளுக்கு தந்தையாக சிலர் கொண்டாடப்படுகிறார்கள். அந்தந்த துறைகளின் வளர்ச்சிக்காக அவர்கள் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களாக இருப்பதே அந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணம். அப்படி சில அர்ப்பணிப்பு தந்தைகளைப் பற்றிய சிறிய தொகுப்பு இது...

*சட்டத்துறையின் தந்தை - ஜெராமி பென்தம்

*வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ்

*புவியியலின் தந்தை - ஏராஸ்டோதீனஸ்

*ஆங்கிலக் கவிதையின் தந்தை- ஜியாஃப்ரி சாஸர்

*தாவரவியலின் தந்தை- தியோபிராஸ்டஸ்

*மரபியலின் தந்தை  கிரிகர் மெண்டல்

*மருத்துவத்தின் தந்தை - ஹிப்போகிரேட்டஸ்

*பொருளாதாரவியலின் தந்தை - ஆடம் ஸ்மித்

*சமூகவியலின் தந்தை - அகஸ்டஸ் கொம்டி

*ஹோமியோபதியின் தந்தை- சாமுவேல் ஹானிமன்

*கணிப்பொறியின் தந்தை- சார்லஸ் பாப்பேஜ்

*செல்போனின் தந்தை - மார்ட்டின் கூப்பர்

*தமிழ் உரைநடையின் தந்தை  வீரமா முனிவர்

*ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தை  தன்வந்திரி

*நகைச்சுவையின் தந்தை -ஆரிஸ்டோபேனஸ்

*வேதியியலின் தந்தை - ராபர்ட் பாயில்

*நவீன வேதியியலின் தந்தை -லவாய்சியர்

*அணுகுண்டின் தந்தை -ராபர்ட் ஓபன்ஹெய்மர்

*துப்பறியும் நாவல்களின் தந்தை- எட்கர் ஆலன் போ

*அணுக்கரு இயற்பியலின் தந்தை  எர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு

*ரயில்வேயின் தந்தை - ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்

*தொலைபேசியின் தந்தை -அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

*தமிழ் நாடகவியலின் தந்தை  பம்மல் சம்பந்த முதலியார்

*இந்திய சினிமாவின் தந்தை  தாதா சாஹேப் பால்கே

*இந்திய விண்வெளி இயலின் தந்தை - விக்ரம் சாராபாய்

- ஏ.ஃபைஹா, கீழக்கரை.