ஃபீடிங் கண்காணிப்பு!



குழந்தைகள் பால் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் என்ன புதுமை செய்துவிட முடியும்? ‘‘செய்யலாம்’’ என்கிறது, அமெரிக்காவின் லாஸ் வெகாஸைச் சேர்ந்த ‘ஸ்லோ கன்ட்ரோல்’ நிறுவனம். இவர்கள் உருவாக்கியுள்ள ‘பேபி க்ளக் க்ளக்’ என்ற இந்த பாட்டிலில் ஒரு கண்காணிப்பு ட்ராக்கர் உள்ளது.

குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது, என்ன வேகத்தில் குடிக்கிறது, பாட்டிலில் அடைப்பு இருக்கிறதா, குழந்தை காற்றையும் சேர்த்து உள்ளே இழுத்துக் கொண்டதா என எல்லாம் கண்காணித்து உங்கள் மொபைல் போனுக்கு தகவல் அனுப்புகிறது இந்த பாட்டில்.