கிடைத்தது பீகிள்!



கடந்த 2002ம் ஆண்டு செவ்வாயை நோக்கிச் சென்றது பீகிள் 2 விண்கலம். பிரிட்டிஷ் தயாரிப்பான இது, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

2003ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி திடீரென காணாமல் போன இது, செவ்வாய்க் கிரகத்தில் கிடப்பதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். பாராசூட், ஆன்டெனா என எல்லாம் இதனுடன் இருந்தாலும், இதனுடன் தொடர்புகொண்டு பயன்படுத்துவது சிரமம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.