தெரியுமா? பொய்... பொய்...




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

          கார்பன் தாளை கண்டு பிடித்தவர் ரால்ஃப் வெட்ஜ் வுட்.

இந்தியாவிலேயே முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கம் தமிழகத்தில்தான் தொடங்கியது.

சோதனை முறையில் மின்சார ரெயிலை இயக்கிக் காட்டியவர் வெர்னர் வோன் சீமன்ஸ். 1879ல்.

முதன்முதலில் ரத்ததானம் செய்யும் முறையைத் தொடங்கி வைத்தவர் ஆலிவர் லண்டன். 1921ம் ஆண்டில்.

உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் முதல் நினைவு தபால்தலை இந்தியாவில் வெளியானது. 1978ல்.

முதன்முதலாக மாமல்லபுரத்தில் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்- வில்லியம் சேம்பர்ஸ். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் 1772ல் இந்த ஆய்வை மேற்கொண்டார்.

முதன்முதலில் விண்ணில் பறந்த இந்திய விமானத்தின் பெயர் மலபார் ப்ரின்ஸ். 1948 ஜூன் 8 அன்று.

சமையல் எரிவாயு அடுப்பை 1855ல் ஜெர்மனியைச் சேர்ந்த பன்சென் கண்டுபிடித்தார்.

பொய் பேசுபவர்களைக் கண்டறியும் இயந்திரத்தின் பெயர் லை டிடெக்டர் அல்லது பாலிகிராஃப். இதைக் கண்டுபிடித்தவர் ஜான் ஏ லார்சன். 1921ல்.
சி.பரத்,
சென்னை-82..