மெயில் பாக்ஸ் ‘ஓ’ போடு!




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine



‘டெஸ்ட் கிரிக்கெட் 2000’ கட்டுரை புள்ளிவிபரங்கள் சூப்பர். வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாயிரமாவது டெஸ்ட் போட்டியில் நம்மவர்கள் சொதப்பி விட்டார்களே..
 டி.வெங்கடேஷ்பாபு,
காரமடை.

ண்ணகி போல கிளிகளும் கற்புக் கரசிகளா? பலே. புதிய தகவலாக இருக்கிறதே! பறவைப் பிரியர்களை கொள்ளை கொண்டு விட்டது ‘ஆகாய ஆட்சி’ தொடர்.
 பி.செல்வம்,
பூந்தமல்லி.

ண்ணில் புதையும் மெக்சிகோ நகரம் பற்றிய கட்டுரை அடிவயிற்றைக் கலங்கச் செய்துவிட்டது! விரைவிலேயே இதற்கு விஞ்ஞானிகள் தீர்வு காண்பார்கள் என்று நம்புவோம்.
 ஆர்.கீர்த்தனா,
லால்குடி.

பூமிக்கடியில் நெருப்பு இருக்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக விளக்கிய ஐன்ஸ்டீனுக்கு நிச்சயம் ‘ஓ’ போட வேண்டும்!
 ஆர்.சக்திவேல்,
கண்டாச்சிபுரம்.

தூவானம், துளித்துளியாய், தெரியுமா, தகவல் களஞ்சியம் போன்ற பகுதிகள் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கு பயன் பெறும் வகையில் உள்ளன.
ஆர்.பாலாஜி,
நெல்லை.