பாசிப்பருப்பின் பயன்கள்!



பயத்தம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு என்பது இந்திய சமையலின் முக்கிய பருப்பு வகைகளில் ஒன்று. இது பச்சைப்பயறின் உள்பகுதியை பிரித்து உலர்த்திய வடிவம். குறைந்த ஈரப்பதத்திலும் வளரக்கூடிய தாவரமாகும்.  இது வெப்பமண்டல மண்ணில் சிறப்பாக வளரும். தமிழகத்தில், நெல்லை, மதுரை, தஞ்சை, திருவாவூர் போன்ற பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது.

இயல்புகள்  

நிறம் - வெளிர் மஞ்சள்

சுவை -  மிதமான இனிப்பு சுவை கொண்டது.

 இயல்பு - குளிர்ச்சியானது

செரிமான வேகம் - எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.

இந்த இயல்புகள்   காரணமாக பாசிப்பருப்பு குழந்தைகள், முதியவர்கள், நோயிலிருந்து மீள்பவர்கள் ஆகியோருக்கு மிகப் பொருத்தமான உணவாக கருதப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவப் பயன்பாடுபழங்காலத்தில் பாசிப்பருப்பை குளிர்ச்சி தரும் பருப்பு என்று கருதி காய்ச்சல், வாய் வெடிப்பு, வயிற்றுப்புண், உடல் சூடு ஆகியவற்றை குறைக்க பயன்படுத்தினர்.  மேலும் சோம்பல், படப்படப்பு, உடல் சூழ்நிலை சீர்குலைவு போன்றவற்றில் உடலை சமநிலைப்படுத்தும் சக்தி கொண்டது.

தினசரி பரிந்துரைக்கப்படும் அளவு

பெரியவர்கள் -  அரை கப்
குழந்தைகள் - 2-3 தேக்கரண்டி
முளைவிட்டது - தினமும் சிறு அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

உணவில் பயன்படுத்தும் வழிகள்

பாசிப்பருப்பு சுண்டல், பாயசம், ரசம், அடை மற்றும் கிச்சடி

பாசிப்பருப்பு சத்து கஞ்சி

பாசிப்பருப்பு தோசை

முளைகட்டிய பாசிப்பயறு சாலட்

பாசிப்பருப்பின் உணவு சத்து மதிப்பு

கலோரி - 347 kcal
கார்போஹைட்ரேட் - 63 கிராம்
புரதச்சத்து-  24 கிராம்
கொழுப்பு - 1.2 கிராம்
நார்ச்சத்து - 16 கிராம்
இரும்புச்சத்து - 6.7 மில்லிகிராம்
கால்சியம் - 132 மில்லிகிராம்
 மெக்னீசியம் -  189 மில்லிகிராம்
 பொட்டாசியம் -  1246 மில்லிகிராம்

பி - காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், ஃபோலிக் ஆசிட், வைட்டமின் சி மற்றும் ஈ போன்றவை நிறைந்துள்ளது.

ஃபோலிக் அமிலம் - 159 mcg

பாசிப்பருப்பு ஊறவைத்தாலோ, முளைக்க வைத்தாலோ அதன் ஊட்டச்சத்து மதிப்பு மேலும் 20-30 சதவீதம் உயர்கிறது.

பாசிப்பருப்பின் நன்மைகள்

 செரிமானத்திற்கு மிகவும் சிறந்தது - வயிறு கோளாறுகள், அஜீரணம், அமிலத்தன்மை உள்ளவர்களுக்கு  ஏற்ற உணவு.  அதிக நார்ச்சத்து  இருப்பதால்  குடல் சுத்தமாக இருக்க உதவுகிறது.

உடல் சூட்டை குறைக்கும் -  கோடையில்   அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். உடல் சூடு, வாயுத் தொல்லை, வயிறு எரிச்சல் போன்றவற்றை குறைக்கிறது. புரதச்சத்து நிறைந்தது -  தசை வளர்ச்சிக்கு உதவும். சைவ உணவாளர்களுக்கு சிறந்த புரத ஆதாரம், உடற்பயிற்சி செய்பவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், அனைவருக்கும் சக்தி தரும்.  உடல் திசுக்களை பழுது பார்க்க உதவுகிறது. 

 இதய ஆரோக்கியத்துக்கு சிறந்தது - நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துகிறது.
ரத்தசோகயை குறைக்கும் - இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்ததால் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

எடையை குறைக்க உதவும் - குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதால் வயிறு நிரம்பிய உணர்வை தரும். அடிக்கடி பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பருப்பு குறைந்த கிளைசெமிக் இன்டக்ஸ் கொண்டுள்ளது அதனால், ரத்த சர்க்கரையை மெதுவாக உயர்த்துகிறது. தினமும் உணவில் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.  

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

*வைட்டமின்கள், ஜிங்க், மெக்னீசியம் அதிகம் 

*உடலின் இயற்கை பாதுகாப்பு திறனை மேம்படுத்துகிறது.

*குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துகிறது.

*தோல் மற்றும் முடி ஆரோக்கியம்.

*உடல் சூடு குறைவதால் முகப் பிரச்னையை குறைக்கும்.

*சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

*புரதம் மற்றும் இரும்புச்சத்து காரணமாக முடி கொட்டுதல் குறையும்.

*கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானது.

*ஃபோலேட் மிக அதிகம் -  குழந்தையின் நரம்பு குழாய் வளர்ச்சிக்கு இது உதவும்.

*வாந்தி, அசதி போன்ற பிரச்னைகளை குறைக்கிறது.

பயத்தம்பருப்பு என்பது சத்துக்கள் நிறைந்த, எளிதில் செரிமானமாகும். அனைத்து வயதினருக்கும் ஏற்ற மிகச்சிறந்த உணவுப் பொருள். இதில் உள்ள புரதம், நார்ச்சத்து, கனிமங்கள், வைட்டமின்கள் உடலின் தினசரி தேவையை பூர்த்தி செய்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  அதனால் தினசரி உணவில் பயத்தம் பருப்பை சேர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைமுறை உருவாக்கும் முக்கியமான வழியாகும்.