TTH தலைவலியிலிருந்து தப்பிப்போம்!
வலியை வெல்வோம்
கடந்த இரு மாதங்களாக சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைக்கு வந்தவர்களில் கழுத்து மற்றும் தலைவலி பாதிப்புக்குள்ளானவர்கள்தான் அதிகம். ஆகவே, அதைக் குறித்து எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால், சென்ற இரு கட்டுரைகள் கர்ப்பிணிகள் பற்றியது என்பதால் தலைவலி குறித்து எழுதுவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது தற்போதுதான் அதற்கான சரியான வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமைந்தது.  ஏற்கெனவே கழுத்து வலியைப் பற்றி எழுதிய கட்டுரைகளில் சிறிது தலைவலியைப் பற்றியும் எழுதியிருப்பேன். ஆகவே உங்களுக்கு ஓரளவு இதைப்பற்றி தெரிந்து இருக்கும்.
ஒற்றைத் தலைவலி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் TTH (Tension type headache) , Cervicogenic headache ஐ பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா?
ஒரு வருடத்தில் தோராயமாக 38% மக்கள் TTH-ஐ அனுபவிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
டென்மார்க்கின் , மக்கள் தொகையில் 78% பேர் தங்கள் வாழ்நாளில் ஏதேனும் ஒரு கட்டத்தில் TTH-ஐ அனுபவித்துள்ளனர் என மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன. தோராயமாக 24% முதல் 37% மக்கள் ஒரு மாதத்தில் பல முறை TTH-ஐ அனுபவிக்கின்றனர் எனவும் கூறுகிறது.1998-இல் ஸ்வார்ட்ஸ் ஆய்வின்படி, பெண்கள்தான், இந்த வகை தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுவதில் முன்னிலை என்று கூறுகிறார்.
இந்த வகை தலைவலிகள் பொதுவாக ஒருவரின் பதின்பருவத்தில் தொடங்குகின்றது, மேலும் 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றனராம். ஸ்வார்ட்ஸ் கண்டறிந்தபடி, ஒரு வருடத்தில் 40.1% Caucasian ஆண்களும் 46.8% Caucasian பெண்களும் TTH-ஐ அனுபவிப்பதாக கூறுகிறார்.
அதில் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் தொகையில், ஒரு வருடத்தில் TTH-ன் பரவல் ஆண்களில் 22.8% மற்றும் பெண்களில் 30.9% ஆக இருந்ததாகக் கூறுகிறார். இந்தியாவிலும் இது மிகவும் பொதுவான முதன்மைத் தலைவலிக் கோளாறாகும்.
சமீபத்திய ஆய்வுகளின்படி இந்தியாவில் TTH-ன் பரவல், 2024-இல் வெளியிடப்பட்ட ஒரு குறுக்கு-வெட்டு மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வு, டெல்லி மற்றும் NCR பகுதியில் (ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்கள்) 18-65 வயதுடையவர்களிடையே TTH-ன் பரவலை மதிப்பிட்டது.
ஒரு வருட பரவல் விகிதம் 26%ஆக மதிப்பிடப்பட்டது, இது உலகளாவிய மதிப்பீடுகளுடன் (26%) ஒத்துப்போகிறது. 2019-ல் ‘The Lancet Global Health’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, இந்தியாவில் தலைவலி கோளாறுகள் (மைக்ரேன் மற்றும் TTH உட்பட) 488 மில்லியன் மக்களைப் பாதித்ததாக மதிப்பிட்டது, இதில் TTH தோராயமாக 374 மில்லியன் மக்களைப் பாதித்ததாக கூறுகின்றனர்.
இது மக்கள் தொகையில் 28-30%பேர் TTH-ஐ அனுபவிக்கின்றனர் என்பதைக் குறிக்கிறது, மேலும் இது உலகளாவிய பரவல் மதிப்பீடுகளுக்கு ஒத்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இளம்பருவத்தினரிடையே (11-18 வயது) TTH-ன் பரவல் 12% முதல் 49% வரை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன, இது வயது மற்றும் பாலினத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. பெண்களிடையே, குறிப்பாக 11 வயதுக்கு மேல், பரவல் அதிகரிக்கிறது.இளைஞர்களிடையே (18-30 வயது) TTH பரவல் குறித்த குறிப்பிட்ட தரவு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், மன அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை காரணிகள் முக்கிய தூண்டுதல்களாக உள்ளன எனவும் கூறுகிறது..
2025-இல் ‘Frontiers in Neurology’ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு, தெற்காசிய நாடுகளில் (இந்தியா உட்பட) TTH-ன் பரவல் மற்றும் நோய்ச்சுமை (YLDs - Years Lived with Disability) 1990 முதல் 2021 வரை அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது.
இந்தியாவில் TTH-ன் வயது-தரப்படுத்தப்பட்ட பரவல் விகிதம் உலகளாவிய மதிப்பீடுகளுடன் (26%) ஒத்துப்போகிறது.இந்தியாவில் TTH-ன் பரவல் மாநிலங்களுக்கு இடையே குறைந்த மாறுபாட்டுடன் உள்ளது, ஆனால் சமூக-பொருளாதார குறியீட்டு (SDI) மாநிலங்களுடன் நேர்மறையான தொடர்பு உள்ளது.
நகர்ப்புற மற்றும் அதிக SDI உள்ள பகுதிகளில் TTH சற்று உயர்ந்திருக்கலாம் என்றும் சில கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.பெண்களுக்கு, குறிப்பாக 15 - 49 வயதுடையவர்களுக்கு, TTH மற்றும் மைக்ரேன் இரண்டும் அதிகமாகக் காணப்படுகின்றன, இது மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் காரணிகளுடன் தொடர்புடையது எனச் சொல்கின்றனர்.
இந்தியாவில் TTH-ன் ஒரு வருட பரவல் தோராயமாக 26-30% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது, இதுவும் உலகளாவிய மதிப்பீடுகளுடன் ஒத்துப்போகிறது.1990 முதல் 2021 வரை TTH-ன் மொத்த பரவல் மற்றும் நோய்ச்சுமை இந்தியாவில் அதிகரித்துள்ளது, ஆனால் வயது-தரப்படுத்தப்பட்ட விகிதம் உலகளாவிய மதிப்பீடுகளுடன் ஒத்துள்ளதாகவும் சில கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர்..
மேலே குறிப்பிட்டவை மருத்துவக் கட்டுரைகள், மருத்துவ நியூஸ் லெட்டர்கள் மற்றும் பொது ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள்.
Tension-Type Headache (TTH):
இது மிகவும் பொதுவான முதன்மை தலைவலி கோளாறாகும். இது ஒருவரின் வாழ்க்கை முறையை பாதிக்கலாம்.TTH ஆனது மன அழுத்தம், muscle tension அல்லது நரம்பு கடத்திகளான செரோடோனின் போன்றவற்றின் ஏற்றத்தாழ்வால் ஏற்படலாம். மேலும், இதன் காரணங்கள் இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை. ஆனால் மூளையில் வலி பாதைகளைத் தூண்டுவதாக நம்பப்படுகிறது.
இது பொதுவாக உளவியல் அழுத்தம் அல்லது தோள்பட்டை, கழுத்து, தலையோடு மற்றும் தாடையில் உள்ள தசை இறுக்கங்களுடன் தொடர்புடையதாக முன்பு கருதப்பட்டது, ஆனால் இந்தக் கோட்பாடுகள் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளன.
வகைகள்:
எபிசோடிக் TTH (Episodic TTH):
*ஒரு மாதத்தில் 15 நாட்களுக்கு குறைவாக ஏற்படும்.
*சில மணி நேரம் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம்.
நாட்பட்ட TTH (Chronic TTH):
*ஒரு மாதத்தில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள், மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து ஏற்படும்.
*எபிசோடிக் TTH-ஐ விட வலி பாதிப்புகள் மிதமானது முதல் கடுமையான தீவிரத்துடன் இருக்கலாம்.
நோயறிதல் முறை :
மருத்துவ வரலாறு (History Taking):
*இது அனைத்து வகை நோய்களுக்கும் மிக முக்கியமான நோயறியும் கருவி.
*தலைவலியின் காலம், , தீவிரம், மற்றும் தொடர்புடைய அறிகுறிகள் (எ.கா., குமட்டல், ஒளி/ஒலி உணர்திறன்) பற்றி விசாரிக்கப்படும்.
*மைக்ரேன்களுடன் தொடர்புடைய visual disturbances இல்லாதது TTH-ஐ உறுதிப்படுத்த உதவுகிறது.
உடல் மற்றும் நரம்பியல் பரிசோதனை :
*கழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளில் இறுக்கம் அல்லது மென் தன்மையை மதிப்பீடு செய்ய உதவும்.
*கழுத்து இயக்க வரம்பு சோதிக்கப்படலாம். ஆனால் TTH-இல் இது பொதுவாக சாதாரணமாக இருக்கும்.
*CT ஸ்கேன், MRI அல்லது EEG ஆகியவை மற்ற காரணங்களை (எ.கா., மூளைக் கட்டி, மெனிஞ்சைட்டிஸ்) நிராகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
*TTH-ஐ உறுதிப்படுத்த குறிப்பிட்ட இமேஜிங் தேவையில்லை. ஆனால் இரண்டாம் நிலை தலைவலிகளை விலக்குவதற்கு உதவுகிறது.
அறிகுறிகள் எபிசோடிக் TTH:
*இருபுறம் அல்லது ஒரு புறமாக , தலையை சுற்றி பட்டை போன்ற அழுத்த உணர்வு அல்லது இறுக்க உணர்வு.
*லேசானது முதல் மிதமான தீவிரமான வலி.
*மைக்ரேன்களில் உள்ள கடுமையான குமட்டல் அல்லது ஒளி/ஒலி உணர்திறன் இருக்காது.
*சில மணி நேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம்.
நாட்பட்ட TTH:
*மிதமானது முதல் கடுமையான தீவிரமான வலி, இறுக்கம் ஏற்படலாம்.
*லேசான குமட்டல் ஏற்படலாம். ஆனால் மைக்ரேன்களைப் போல கடுமையான அறிகுறிகள் இருக்காது.
*தலை மற்றும் கழுத்தைச் சுற்றி அழுத்த உணர்வு.
பொதுவான அறிகுறிகள்:
*தலைவலியானது உடல் செயல்பாட்டால் பொதுவாக மோசமாகாது.
*கழுத்து அல்லது தோள்பட்டை தசைகளில் இறுக்கம் இருக்கலாம். ஆனால் இது செர்விகோஜெனிக் தலைவலியைப் போல கழுத்து இயக்கத்தால் தூண்டப்படுவதில்லை.
சிகிச்சை முறைகள் TTH-ஐ நிர்வகிக்க பல மருத்துவ மற்றும் பிசியோதெரபி அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ சிகிச்சை மற்றும் தடுப்பு சிகிச்சை:
*முறையான மருத்துவர்களால் மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
*நாட்பட்ட TTH உள்ளவர்களுக்கு உளவியல் அணுகுமுறைகள் அவசியம் பிசியோதெரபி சிகிச்சை :
1.பயோஃபீட்பேக்:
மருந்து சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டியவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
2.மையோஃபேசியல் ட்ரிக்கர் ரிலீஸ்
3.கிரையோதெரபி
4.உடற்பயிற்சி - கழுத்து மற்றும் தோள்பட்டையை வலுப்படுத்தும் மற்றும் நீட்சிப் பயிற்சிகள்.
5.மன அழுத்த மேலாண்மை,
6.பணி தொடர்பான எர்கோனோமிக்ஸ்
7.வாழ்க்கை முறை மாற்றங்கள் (Lifestyle Modifications).
அடுத்த இதழில் Cervicogenic headache பற்றியும் TTH லிருந்து எவ்வாறு அது வேறுபடுகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி
|