இசை தரும் இனிய பலன்கள் 6



இசை இன்று உலகம் முழுதும் ஒரு தெரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது. நரம்பியல் மற்றும் ஒட்டுமொத்த சிகிச்சைகளில் இசை கேட்பது ஒரு முக்கிய சிகிச்சை முறையாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

1. வலியை மறக்கச் செய்கிறது
காயங்களாலோ அறுவைசிகிச்சைகளாலோ உள்ளுறுப்புகளின் சீர்கேட்டாலோ ஏற்படும் வலியை இசை தற்காலிகமாக மறக்கச் செய்கிறது.

2. மனநிலையைச் சீரமைக்கிறது
நமது உணர்வுப்பூர்வமான மனநிலைகளைக் கட்டுப்படுத்தும் நியூரான்களை இசை தொடுவதால் சீரற்ற உணர்வுநிலைகள் கட்டுப்படுகின்றன.

3. மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
மனப்பதட்டம் மற்றும் மன அழுத்தம் இரண்டுமே இசையால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அமைதியான மனநிலையை இசை உருவாக்குகிறது.

4. இதய நலம் மற்றும் ரத்த ஓட்டம் மேம்படுகிறது
இசை மனதை ரிலாக்ஸாக மாற்றி நமது இதயத் துடிப்பை சீராக்குவதால் ரத்த ஓட்டமும் இயல்படைகிறது.

5. கவனக் குவிப்பை வழங்குகிறது
இசை கேட்கும் பழக்கம் நாளடைவில் கவனச் சிதறல்களைக் கட்டுப்படுத்தி கவனக் குவிப்பையும் கிரகிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.

6. ஆரோக்கியத்தின் நண்பன்
நினைவு மறதி நோயாளிகள்: மெமரி லாஸ் எனப்படும் நினைவு மறதி கொண்ட நோயாளிகளின் மூளைத் திறனை இசை செம்மைப்படுத்துகிறது. நினைவில் வைக்கும் திறனை
அதிகரிக்கிறது.

பக்கவாதம்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களை இசை குணமாக்குகிறது. மூளையின் இயக்கத்தை சீரமைக்கிறது.அறுவைசிகிச்சை செய்தவர்கள்: அறுவைசிகிச்சையின் அவதியை இசை மறக்கச் செய்கிறது. விரைவில் அவர்களைத் தேற்றுகிறது.

மனநலம்: மனநலனை மேம்படுத்துவதில் இசை சிறப்பானது. ஸ்ட்ரெஸ், பதட்டம் மட்டுமல்லாமல் எல்லாவகை மனநிலைக் கோளாறுகளையும் இசை
ஆற்றுப்படுத்துகிறது.

- இளங்கோ