ஆரோக்கியம் தரும் ஆயில் புல்லிங்!



ஆயில் புல்லிங் என்பது  நல்லெண்ணெய்யை பயன்படுத்தி  செய்யப்படும் ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு  தீர்வுகளைக் காணலாம்.
ஆயில் புல்லிங் செய்வதினால் கிடைக்கும்  நன்மைகளைப்  பார்ப்போம்:தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வதால் நம் உடலில் உள்ள நச்சுத் தன்மையானது வெளியேற்றப்படு கிறது. இதன்மூலம் நம் சருமம் பொலிவாக காட்சியளிக்கும்.

தைராய்டு பிரச்சனை உள்ளர்களுக்கும் ஆயில் புல்லிங் சிறந்த நிவாரணி பயன்படுகிறது. ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் தைராய்டு சுரபிகள் சீராக சுரக்கப்படுகிறது.
மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்து வருவதன் மூலம் மூட்டு வலி, மூட்டு வீக்கம் சீராகிறது. ஆயில் புல்லிங், வாயில்  உள்ள நச்சுகளை நீக்கி வாய் துர்நாற்றத்தைத்  தடுக்கிறது. ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுத்து, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

நன்றாக பசியை  தூண்டி, செரிமான பிரச்சனைகள் சரி செய்கிறது. தூக்கமின்மைக்கும்  தீர்வாகிறது.  நல்ல மனநிலை உண்டாக்கி  உடல் சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
நல்லெண்ணெயை பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்வதனால், உடல் குளிர்ச்சி பெற்று கண்களில் உள்ள நரம்புகள் சீராகிறது.மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து ஆயில் புல்லிங் செய்வதன் மூலம்  உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் சமநிலை படுத்தபட்டு மாதவிடாய் சுழற்சியானது சரியான முறையில் வருகிறது.

ஒற்றைத் தலைவலி, சைனஸ், தைராய்டு, தோல் வியாதிகள், சிறுநீரகக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும், தூக்கமின்மைக்கும் ஆயில் புல்லிங் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.   
ஆயில் புல்லிங் செய்யும் முறை:

சுத்தமான நல்லெண்ணெய் 10 மி.லி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும். பற்களின் இடையில் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்யலாம். எண்ணெய் நுரைத்தவுடன் வெளியேற்றிவிட வேண்டும். பின்னர் சுத்தமான வெதுவெதுப்பான நீரால் வாயை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கிருமிகள் எல்லாம்  உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிடுகிறது. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது.

- ரிஷி