சீனாவின் வைரஸ் ஆய்வகம்... தடுப்பு மருந்து தயாரிக்கும் அமெரிக்கா...



க்ரைம் டைரி

கரோனா பயோ வாரை நடத்துவது யார்?!


உலக சுகாதார நிறுவனம் கரோனா வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை உலக சுகாதார நெருக்கடிநிலையாக(Public Health Emergency Of International Concern) அறிவித்துள்ளது. நாவல் கொரோனா வைரஸ் என்று தற்காலிகமாகக் குறிப்பிடப்பட்டு வந்த இதற்கு COVID-19 என்றும் உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியிருக்கிறது.

மேலும் துறைசார்ந்த அமெரிக்க வல்லுநர்கள் இந்நோய் முறையாக கட்டுப்படுத்தப்படாவிடில் 18 மாதத்திற்குள் 6.5 கோடி பேர் இறக்க நேரிடலாம் எனவும் கணித்துள்ளனர். கரோனா என்பது பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஒரு வைரஸ்தான். 2002-க்கு முன்னர் கரோனாவால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சளித்தொல்லைக்கு மட்டுமே காரணமாக இருந்து வந்தது. தற்போது மட்டும் ஏன் விஸ்வரூபமெடுத்திருக்கிறது?!

முதலில் கரோனா வைரஸ் என்பது உயிரிப்போர்(Biowar)தானா என்ற சந்தேகத்துக்கு, ஆமாம் என்று பதிலளிப்பதற்கான பல சாத்தியங்கள் உண்டு.
2019 டிசம்பரில் சீனாவில் வூஹான் பகுதியில் உள்ள சட்ட விரோத விலங்கு இறைச்சிக் கூடத்தில் இருந்து பரவியது இந்த கிருமி என்கிறார்கள். அது தவிர கரோனா பற்றி வேறு எதுவும் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. பாலூட்டிகள், பறவைகளை மட்டுமே இந்த வைரஸ் தாக்கும் என்கின்றனர். பிறகு எப்படி பாம்புகள் மூலம் பரவியிருக்கலாம் என்ற தகவலை சீனா வெளியிட்டது என்று தெரியவில்லை. இந்த முதல் தகவலே பயோ வாராக இருக்கலாம் என்ற சந்தேகத்தை உருவாக்கியிருக்கும் ஆரம்பப் புள்ளி.

மேலும் மனிதனிலிருந்து மனிதனுக்கு நோய் பரவுதலும் சீனாவில் மட்டுமே மிகமிக அதிகமாக நடந்துள்ளது. மற்ற நாடுகளில் மிக மிகக் குறைவு. ஏற்கெனவே சீனா மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உண்டு. வூஹானில் இருக்கும் வைரஸ் ஆய்வு மையம் பற்றிய கேள்வி எழும்போதெல்லாம், ‘அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல. உயிர்க்கொல்லி நோய் தடுப்பு மருந்து ஆய்வகம்’ என சீனா பதிலளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஆனால், இப்போது நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதால் பாம்பிலிருந்து பரவியிருக்கலாம் என்று பாம்பு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு சமாளிக்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் ஜனவரி 24-ம் தேதி Bill Gertz எனும் பத்திரிக்கையாளர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இஸ்ரேல் உளவுத்துறை உயிரி போர்முறை ஆய்வாளரான Dany Shoham என்பவரை மேற்கோள் காட்டியும், சீனாவில் தற்போது நோய் பாதித்த வூஹான் பகுதியில்தான் சீன அரசால் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸைக் கையாளும் அங்கீகாரம் பெற்ற வைரஸ் ஆய்வு நிறுவனங்கள்(Wuhan Institute of Virology) உள்ளது எனும் முக்கிய விஷயத்தையும் பகிர்ந்துள்ளார்.

சீன நோய் தடுப்புத்துறை அதிகாரிகள் Wuhan விலங்கு சந்தையில் உள்ள விலங்குகள் மூலம் நோய்த்தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்தாலும் (சந்தையில் சீன-அமெரிக்க போட்டி காரணமாக) அமெரிக்கா இப்போர் தந்திரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கருத்தையும் அப்பத்திரிகை பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா சீனாவிற்கு பாடம் கற்பிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பதையும் புறந்தள்ள முடியாது.
கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு பகிரப்பட்ட சீன ரத்த மாதிரிகள் உயிரி போர்முறைக்கு உதவியிருக்கலாம்.

அமெரிக்க தேசிய நோய் நிறுவனத்தின் இயக்குநரும் தொற்று நோய் ஆய்வில் உலகத்தில் தலைசிறந்த வல்லுநருமான Dr.Anthony Fauci, அமெரிக்க மருத்துவ இதழில் (JAMA) ஜனவரி 23-ல் ஓர் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருக்கிறார். ‘தற்போதுள்ள Messenger RNA மூலம் 3 மாதத்திற்குள் கரோனாவுக்கு தடுப்பூசி உருவாக்கும் பணி நிறைவடைந்துவிடும். பரிசோதனைக்குப்பின் அதை பயன்படுத்தும் சூழலையும் உருவாக்க முடியும்’ என்று கூறியுள்ளார். இதிலிருந்து கரோனாவுக்கான தடுப்பூசி மருந்து தங்களிடம் இருக்கிறது எனும் மறைமுக தகவலா எனவும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.

அதாவது அமெரிக்க பொருளாதாரத்துடன் மோதினால் சீனா போன்ற நாடுகள் கடும் விளைவுகளை(உயிரி போர்முறை?) சந்திக்க நேரிடும். அதற்கு நிவாரண சிகிச்சையும் எங்களிடமே உண்டு என்கிறார்களா என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.  முக்கிய விஷயம் என்னவெனில் இதுவரை  மனிதன்-மனிதன் நோய்பரவலும் சீனாவில் மட்டுமே அதிகம். சீனாவிற்கு வெளியே இறப்பு பெரும்பாலும் இல்லை என்பதற்கு என்ன காரணம் என்று விடை கண்டாக வேண்டும்.

அப்போதுதான் உயிரி போர்முறை தந்திரமா இல்லையா என்ற தெளிவான புரிதல் வரும்.இதற்கிடையில் Dr.Francis Boyle (Biological War convention சட்டத்தை கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர்) இப்புது வைரஸ் உயிரிப்போர் ( Bio Warfare) ஆக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகம்/IIT செய்த ஆய்விலும் ஓர் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கரோனா வைரஸ் வெளியில் உள்ள Spike Protein மூலம் மனித செல்களுடன் இணைத்து பாதிப்பை ஏற்படுத்தும். அந்த Spike protein-ல் 4 இடைச்செருகல் உள்ளது என்பதும், அவை AIDS 1ன் சிறுபகுதி என்றும், அந்த நான்கும் அமினோ அமில ஆய்வில் ஒத்துள்ளது என்றும், அவை பிற கரோனா வைரஸில் இல்லை என்பது உயிரிப்போருக்கான வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.

முதல் கட்ட நடவடிக்கையாக, ‘வைரஸ் உருவானதற்கு வெளவால் காரணம்’ என கூறி வூஹான் சந்தையை முதலில் மூடியது. இருப்பினும் வைரஸ் அசுர வேகத்தில் பரவவே வூஹானுக்கு அவசரம் அவசரமாக ‘சீல்’ வைத்தது. சீனா வெளியிடும் இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய அறிவிப்பின் மீதும் சந்தேகம் எழுகிறது. உயிர்ப்பலி எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்கின்றன மற்ற உலக நாடுகள்.

சீனா மீது இருக்கும் இன்னோர் சந்தேகம்… வூஹான் மாகாணத்தில் உள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் விற்கப்பட்ட விலங்குகளில் இருந்துதான் இந்த வைரஸ் பரவியுள்ளது என சீன ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர். ஆனால், சம்பந்தப்பட்ட 9 நோயாளிகளும் அந்த சந்தைக்கு சென்றவர்கள் இல்லை. வேறு நபர்கள் மூலம் இவர்களுக்கு பரவியுள்ளது’ என குறிப்பிட்டுள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் இருந்து பரவியது என்பதை ஆய்வாளர்கள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பிறந்த 30 நாளே ஆன குழந்தைக்கு கரோனா வைரஸ் தாக்கியிருப்பது, தாயிடமிருந்து, தாய்ப்பால் வழியாக பரவியதா, கர்ப்பத்திலேயே பாதிப்பு ஏற்பட்டதா? குழந்தை பிறப்பின்போது பாதிப்பு ஏற்பட்டதா? என பல சந்தேகங்களை மருத்துவர்களிடையே எழுப்பியுள்ளது. இம்மாதிரியான தாயிடமிருந்து குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படுவது இதுவரை இவ்வைரஸின் வரலாற்றில் இல்லை என்பது இந்நோய் உயிரிப்போராக இருக்கலாம் என்பதை உறுதி செய்கிறது.

2018-ல் அமெரிக்காவில் மாசசுசெட்ஸ் பல்கலைகழகத்தில், மருத்துவ மாநாட்டில்  உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் பேசியதையும் கவனித்திருப்போம். 2020-ல் உலகம் மிகப்பெரிய வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறது. அதற்கான நோய்த்தடுப்பூசி மருந்திற்கு நாம் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்போகிறோம் என்று எச்சரித்ததுடன் கிருமி ஆய்வகத்தில் உருவாக்கப்படலாம் எனும் அதிர்ச்சித் தகவலை சொன்னார். பில்கேட்ஸ் இத்தனை திட்டவட்டமாகக் கணித்தது தற்செயலாகவா என்றும் யோசிக்கத் தோன்றாமல் இல்லை.

நிலைமை கட்டுக்கடங்காமல் போவது தெரிந்தவுடன்தான் சீனா மற்ற நாடுகளின் உதவியை நாட முன் வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கரோனா வைரஸின் நுண்ணோக்கி படத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வெளியானதும் ஆஸ்திரேலியாவில் உள்ள உயிர்க்கொல்லி வைரஸ் தடுப்பு ஆராய்ச்சி மையம் அதை போன்ற வைரஸை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கரோனாவிற்கு தடுப்பு மருந்து தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 16-வது இடத்தில் இருக்கிறது. எது எப்படி இருந்தாலும் இதற்கு முன் உலகம் முழுவதும் பீதியை கிளப்பிய சார்ஸ், ஜிகா, எபோலோ வைரஸ்களையெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இந்தியாவிலும் உயிரிப்போர் வாய்ப்புக்கான ஆதாரங்கள் இருப்பதை மத்திய உள்துறை செயலாளர் திரு.கமல் பாண்டே 2001-ல் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

1994 - சூரத்தில் ஏற்பட்ட பிளேக் நோய்
1996 - டெல்லியில் ஏற்பட்ட டெங்கு நோய் (10252 பேர் பாதிக்கப்பட்டு 423 பேர் இறந்து போயினர். பொதுவாக இறப்பு விகிதம் 1 % கீழ் இருக்க வேண்டும் என்ற நிலையில் மிக அதிகமாக 4.3 % இருந்தது.
மேலும் இந்தியாவில் இல்லாத Type 2 Genotype 4 வகை வைரஸ் அது)

2001 - சிலிகுரியில் (மேற்கு வங்கம்) ஏற்பட்ட நிபா வைரஸ் பாதிப்பு. (66 பேர் பாதிக்கப்பட்டு அதில் 45 பேர் இறந்து போயினர்) ஆக நாமும் கவனமுடன் இருந்து, உரிய நோய் கண்காணிப்பு, கண்டுபிடிப்பு,/ தனிமைப்படுத்துதல் மற்றும்  நோய்த்தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தால் இப்புது வைரஸை எதிர்கொள்ளலாம்.

- உஷா நாராயணன்