வெல்டன் வெள்ளரிக்காய்!



உணவே மருந்து

*வெள்ளரிக்காயை தோல் அகற்றாமல் சாப்பிடுவதே மிகவும் நல்லது. ஏனெனில், வெள்ளரியின் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி அதிகம் காணப்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்.

*வெள்ளரிக்காய் சிறுநீரக நலன் காக்க மிகவும் சிறப்பான மருந்து. காரணம், நமது உடலில் உள்ள Uric அமிலத்தை குறைக்க வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது.

*வயிற்றுப்புண் மற்றும் மலச்சிக்கலை குணப்படுத்தும் திறன் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

*சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவில், கீல்வாதம் தொடர்புடைய பாதிப்புகளையும் வெள்ளரிக்காய் குணப்படுத்தும் என கண்டுபிடித்துள்ளனர்.

*ரத்தத்தின் சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிற பொட்டாசியம் வெள்ளரிக்காயில் ஏராளமாக உள்ளது.

*உடலின் சூட்டைத்தணித்து ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குணம் கொண்டது வெள்ளரிக்காய் என்பதால்தான் வெயில் காலத்தில் இதற்கு மவுசு அதிகமாக இருக்கிறது.

*வயிற்றுப்புண் காரணமாக அவதிப்படுபவர்கள் தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்து வர, அந்த பாதிப்பில் இருந்து விரைவில் நிவாரணம் பெறுவார்கள்.

*வெள்ளரிக்காய் ஜூஸ் குடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதன் விதையையும் சேர்த்து அரைத்து ஜூஸாக குடிப்பதே நல்லது. இதனால் உடல் எடை கணிசமாகக் குறையும். 

- வி.ஓவியா