ஆலோசனைகள் 5



Sleep Secrets

பகலில் சுறுசுறுப்பாக Active mode-ல் இருக்கும் மூளையை, மாலையில் Passive mode-க்கு மாற்றுங்கள். மாலை 6 மணிக்கு மேல் மூளையைத் தூண்டக்கூடிய டீ, காபி போன்றவற்றைத் தவிருங்கள். புகை, மது எப்போதும் கூடவே கூடாது.

 9 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு டம்ளர் பால் அருந்தலாம். அதிகபட்சம் 11 மணிக்கு மேல் விழிக்காமல் இருப்பது நலம்.

மொபைல், தொலைக்காட்சி, லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் தூக்கத்தின் விரோதிகள் என்பதை உணருங்கள். உங்கள் படுக்கை அறைக்குள் இவைகளை அனுமதிக்காதீர்கள்.

மூளையை அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தில் விழ வைக்கும் திறன் கொண்டவை புத்தகங்கள். எனவே, தினமும் இரவில் புத்தகம் வாசியுங்கள்.
தூக்கத்துக்கும் கியாரண்டி... அறிவும் வளரும்...

மனதை வாட்டும் பிரச்னை எதுவாக இருந்தாலும், தூங்கச் செல்லும் முன் மறந்துவிடுங்கள். நன்றாகத் தூங்கி தெம்பாக எழுந்தால் இந்த பிரச்னையை தூள்தூளாக்கிவிடலாம் என்று நம்புங்கள்!

Sweet dreams...!

- க.இளஞ்சேரன்