+2 முடித்தவர்களுக்கு டெல்லி போலீஸில் வேலை! 554 பேருக்கு வாய்ப்பு!இந்தியாவின் தலைநகரமான டெல்லியை பாதுகாக்கும் காவல்துறை இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத்தப்படுகிறது. பாராளுமன்ற  வளாகக் கட்டடங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், அரசியல் தலைவர்களின் குடியிருப்புகள், முக்கிய அரசு அதிகாரிகளின்  குடியிருப்புகள் என நாட்டின் அத்தனை அதிமுக்கிய அமைப்புகளும் டெல்லியில்தான்  இருக்கின்றன.

இந்தியாவின் வளர்ச்சி, அரசியல் அமைப்பு சார்ந்த முடிவுகள் என அனைத்துச்  செயல்பாடுகளும், முக்கிய முடிவுகளும் இங்கிருந்தே முடிவாவதால்  மிகுந்த பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. உலகின் மிகப்பெரிய  மெட்ரோபாலிட்டன் போலீஸாக டெல்லி காவல் துறை  விளங்குகிறது. இத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி காவல் துறையில் கான்ஸ்டபில் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதன்படி டெல்லி காவல்துறையில் Head Constable (Ministerial) பணிகளுக்கான சுமார் 554 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

கல்வித் தகுதி

விருப்பமுள்ளவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்விநிறுவனங்களில் படித்து +2வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். மேலும் ஒரு நிமிடத்தில் 30  ஆங்கில வார்த்தைகள் அல்லது 25 ஹிந்தி வார்த்தைகளை கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.

வயதுவரம்பு

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரருக்கு 1.7.2019 அன்றின்படி 18 முதல் 25 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். SC / ST பிரிவினருக்கு  ஐந்து ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை


கணினியில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் மெடிக்கல் டெஸ்ட், டைப்பிங் டெஸ்ட் மற்றும் கம்ப்யூட்டர் ஃபார்மேட்டிங் டெஸ்ட் ஆகியவற்றின்  அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை


விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.delhipolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 13.11.2019.

மேலும் அதிக தகவல்களுக்கு www.delhipolice.nic.in என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.   

-துருவா