இந்திய ராணுவக் கல்வி நிறுவனத்தில் பயிற்சியுடன் வேலை!



சர்வதேச அளவில் மிக வலிமையான ராணுவ பலம் பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நவீன தொழில்நுட்பங்கள் பொருந்திய ஆயுதங்கள், திறன்  மிகுந்த வீரர்கள் என உலக அளவில் பேசப்படும் விதத்தில் உள்ளது இந்திய ராணுவம்.  இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு பல்வேறு பிரிவுகளில்   பணியிடங்கள் நிரப்பப்பட்டுவருகின்றன. அவ்வகையில் எஞ்சினியரிங் மற்றும் +2 முடித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தின் பயிற்சி நிறுவனங்களால் வழங்கப்படும் பயிற்சிகள் மூலம் பணி வாய்ப்பு அளிக்கபடுகிறது. அதன்படி இந்திய ராணுவத் தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று  அதிகாரியாகப் பணிபுரிய விரும்புவோருக்கு அரிய வாய்ப்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் டேராடுனில் இயங்கிவரும் Indian Military  Academy (IMA)-ல்  பயிற்சிகள் வழங்கப்படுவதற்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பயிற்சி வகுப்புகள்

எஞ்சினியரிங் படித்தவர்களுக்கான (40 இடங்கள்) 131st Technical Graduate Course (TGC-131) மற்றும் +2 முடித்தவர்களுக்கான (90 இடங்கள்) 10+2  Technical Entry Scheme Course (TES-43) ஆகிய கோர்ஸ்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவிருக்கிறது. மொத்தம் ஐந்து வருடங்கள் டேராடுனில்  பயிற்சி வழங்கப்படவிருக்கிறது.

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதாவது ஒரு துறையில் எஞ்சினியரிங் முடித்தவர்கள் மற்றும் கடைசி வருடம் படித்துக்  கொண்டிருப்பவர்கள் TGC கோர்ஸிற்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களைத் தேர்ந்தெடுத்து 70%  மதிப்பெண்களுடன் +2 முடித்தவர்கள் TES கோர்ஸிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

வயது வரம்பு

1 ஜூலை 2020 அன்றின்படி +2 முடித்தவர்கள் 16½ வயதிற்கு குறையாமலும் 19½ வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். எஞ்சினியரிங்  முடித்தவர்களுக்கும் அதே நாளின்படி 20 முதல் 27 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

+2 மற்றும் எஞ்சினியரிங்கில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு மற்றும் மெடிக்கல் டெஸ்ட் என  இரண்டு ஸ்டேஜ்களில்  தேர்வுமுறை நடைபெற்று தகுதியானவர்கள்  தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை


விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  http://joinindianarmy.nic.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். TES-43  கோர்ஸிற்கு 13.11.2019 மற்றும் TGC-131 கோர்ஸிற்கு 14.11.2019 விண்ணப்பிக்க கடைசி நாளாகும். மேலதிக தகவல்களுக்கு  http://joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா