வேலை ரெடி!வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு கடலோர காவல்படையில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் துணை ராணுவப் பிரிவுகளில் ஒன்றான இண்டியன் கோஸ்ட் கார்ட் எனும் கடலோரக் காவல்படையில் வேலை. இதில்  என்ட்ரி பேட்ச் எனும் பிரிவில் ஆட்கள் சேர்க்கப்படுகிறது

வேலை: நவிக் எனும் பதவியில் குக் மற்றும் ஸ்டுவர்ட் வேலை. இதில் ஆண்கள் மட்டுமே விண்ணபிக்கலாம்
காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 22 வரை
தேர்வு முறை: எழுத்து, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.11.19
மேலதிக தகவல்களுக்கு: www.joinindiancoastguard.gov.in

பொறியியல் பட்டதாரிகளுக்கு MRPL நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: கர்நாடக மாநிலம் மங்களூருவில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட்(Mangalore Refinery and Petrochemicals  Limited-MRPL) நிறுவனம்

வேலை: செக்யூரிட்ரி இன்ஸ்பெக்டர், இளநிலை அதிகாரி, இளநிலை வேதியியல் டிரெய்னி, டெக்னிக்கல் உதவியாளர், டிராப்ட்ஸ்மேன் டிரெய்னி,  டிரெய்னி உதவியாளர் உள்ளிட்ட வேலைகள்

காலியிடங்கள்: மொத்தம் 233

கல்வித் தகுதி: கலை மற்றும் அறிவியல் பிரிவில் இளங்கலைப் பட்டம், பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள்  சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 முதல் 46 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான  பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு, செய்முறைத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு  செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.11.19

மேலதிக தகவல்களுக்கு: https://www.mrpl.co.in/careers

மத்திய அரசின் அணுமின் நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: என்.பி.சி.ஐ.எல் எனப்படும் மத்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
வேலை: ஸ்டெனோ, லேப் டெக்னீஷியன், நர்ஸ், அசிஸ்டென்ட் உட்பட பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 107
கல்வித் தகுதி: 10வது, +2, பி.எஸ்சி.,(மெடிக்கல் லேப் டெக்னாலஜி), பி.எஸ்சி.,(நர்ஸிங்) மற்றும் பட்டப்படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது வேலைகளைப் பொறுத்து 18 முதல் 21 வரை உள்ளன. அதேபோல அதிகபட்ச வயது வேலைகளைப் பொறுத்து 25,  28 மற்றும் 30 வரை உள்ளன
தேர்வு முறை: எழுத்து மற்றும் திறன் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.11.9
மேலதிக தகவல்களுக்கு: www.npcilcareers.co.in

இண்டியன் பேங்கில் செக்யூரிட்டி கார்டு பணி

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான இண்டியன் பேங்கில் வேலை. இந்த வேலை முன்னாள் ராணுவவீரர்களுக்கானது
வேலை: செக்யூரிட்டி கார்டு
காலியிடங்கள்: மொத்தம் 115. இதில் தமிழகத்துக்கு 48 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 26 வரை
தேர்வு முறை: எழுத்து, மொழித்திறன், உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 8.11.9
மேலதிக தகவல்களுக்கு: www.indianbank.in

நிலக்கரிச் சுரங்கத்துறையில் ஓவர்மேன் பணி


நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான சென்ட்ரல் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிலக்கரிச் சுரங்கத்துறையில் வேலை
வேலை: ஓவர்மேன்
காலியிடங்கள்: மொத்தம் 75
கல்வித் தகுதி: ஓவர்மேன் சான்றிதழ் படிப்பு, கேஸ் படிப்புக்கான சான்றிதழ் மற்றும் முதலுதவி படிப்புக்கான சான்றிதழ்
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.11.19
மேலதிக தகவல்களுக்கு: www.centralcoalfields.in

பாரத ஸ்டேட் வங்கியில்அதிகாரி பணி

நிறுவனம்: எஸ்.பி.ஐ. எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி
வேலை: மேலாளர்(மார்க்கெட்டிங் ரியலெஸ்டேட்& ஹவுசிங்), மேலாளர் (ப்ராடக்ட் டெவலப்மெண்ட்&ரிசர்ச்), சிறப்பு அதிகாரி உள்ளிட்ட வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 67
கல்வித் தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இளங்கலைப் பட்டதாரிகள், எம்.பி.ஏ. முடித்தவர்கள்  சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 25 முதல் 37 வரை
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.11.19
மேலதிக தகவல்களுக்கு: https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/14102019Website%20Detailed%20Advertisement%20SCO-2019-20 -16.pdf

 தொகுப்பு: டி.ரஞ்சித்