வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

இந்திய ராணுவத்தில் மத போதகர் வேலை


நிறுவனம்: இண்டியன் ஆர்மி
வேலை: ஜூனியர் கமிஷண்ட் ஆபிசர் பதவியில் ரிலிஜஸ் டீச்சர் எனும் பல்வேறு மதப் பிரிவுகளில் போதகர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 152. இதில் பண்டிட் 118, கோர்கா பண்டிட் 7, கிராண்டி 9, சன்னி பிரிவில் மெளல்வி 9, சியா பிரிவில் மெளல்வி 1, பாட்ரே 4 மற்றும்  புத்த மதகுரு 4 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: அந்தந்த மதப் பிரிவில் பட்டப்படிப்பு
வயது வரம்பு: 25 முதல் 34 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 29.10.19
மேலதிக தகவல்களுக்கு: www.indianarmy.nic.in

பட்டதாரிகளுக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை

நிறுவனம்: உச்சநீதிமன்றம்.
வேலை: சீனியர் பர்சனல் அசிஸ்டன்ட், பர்சனல் அசிஸ்டன்ட்.
காலியிடங்கள்: மொத்தம் 58. சீனியர் பர்சனல் அசிஸ்டன்ட் 35, பர்சனல் அசிஸ்டன்ட் 23 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: பட்டப்படிப்பு.
வயது வரம்பு: முதல் வேலைக்கு 32-க்குள்ளும், இரண்டாவது வேலைக்கு 27-க்குள்ளும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து தேர்வு, கணினியில் தட்டச்சுத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.10.2019
மேலதிக தகவல்களுக்கு: https://jobapply.in/supremecourt2019paspa/Adv-Eng.pdf என்ற லிங்க்கை பார்க்கவும்.

ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை

நிறுவனம்: மத்திய அரசின் சென்ட்ரல் கவுன்சில் ஃபார் ரிசர்ச் இன் ஆயுர்வேதிக் சயின்சஸ் எனும் ஆயுர்வேத மருத்துவத்துக்கான ஆராய்சிக் கல்வி நிறுவனத்தில்  வேலை.
வேலை: பல்வேறு துறைகளில் குரூப் ‘ஏ’,‘பி’,‘சி’ பதவியிலான வேலைகள்.
காலியிடங்கள்: மொத்தம் 186. இதில் ரிசர்ச் ஆபீசர் 55, லைப்ரரி அண்ட் இன்ஃபர்மேஷன் சயின்ஸ் 1, அசிஸ்டென்ட் ரிசர்ச் ஆபீசர் 30, ஸ்டாஃப் நர்ஸ் 49, ரிசர்ச்  அசிஸ்டென்ட் 47, லைப்ரரி அசிஸ்டென்ட் 2, புள்ளியியல் அசிஸ்டென்ட் 1 மற்றும் டிரான்ஸ்லேட்டர் 1 காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: டிகிரி, பி.ஜி., எம்.டி., எம்.எஸ்.சி., பி.எஸ்சி., எம்.காம்., எம்.ஏ., எம்.ஃபார்ம் என ஏதாவது ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைகளில்  ஒன்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: குரூப் ‘ஏ’ பிரிவுக்கு 40 முதல் 45 வயது வரை, குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவுக்கு 30க்குள்ளும் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.10.19.
மேலதிக தகவல்களுக்கு: http://www.ccras.nic.in

கப்பல் கட்டுமானத் தளத்தில் சேஃப்டி அசிஸ்டன்ட் வேலை

நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் எனும் மத்திய அரசின் கப்பல் கட்டுமான தளத்தில் கான்ட்ராக்ட் வேலை.
வேலை: சானிட்டரி கம் ஹெல்த் இன்ஸ்பெக்டர், சேஃப்டி அசிஸ்டென்ட் மற்றும் ஃபையர்மேன்.
காலியிடங்கள்: மொத்தம் 132. இதில் முதல் வேலையில் 1, இரண்டாம் வேலையில் 72 மற்றும் மூன்றாவது வேலையில் 59 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: 10வது படிப்புடன் வேலைத் தொடர்பாக டிப்ளமோ படிப்பு.
வயது வரம்பு: 30க்குள்.
தேர்வு முறை: எழுத்து, செய்முறை மற்றும் உடல் தகுதித் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.10.19.
மேலதிக தகவல்களுக்கு: www.cochinshipyard.com

மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் அக்கவுன்டன்ட் பணி

நிறுவனம்: மத்திய அரசின் நிலக்கரித் துறையின்கீழ் வரும் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் எனும் நிலக்கரி சுரங்கத்துறையில் வேலை.
வேலை: காஸ்ட் அக்கவுன்டன்ட் மற்றும் அக்கவுன்டன்ட்.
காலியிடங்கள்: மொத்தம் 57.
கல்வித் தகுதி: ஐ.சி.டபிள்யூ.ஏ மற்றும் சி.ஏ.
வயது வரம்பு: 18 முதல் 30 வரை.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.10.19.
மேலதிக தகவல்களுக்கு: www.easterncoal.gov.in

மத்திய அரசின் உணவுக் கழகத்தில் மேலாளர் பணி


நிறுவனம்: ஃபுட் கார்ப்பரேஷன் எனும் மத்திய அரசின் உணவுக் கழகத்தில் வேலை.
வேலை: மேனேஜர்.
காலியிடங்கள்: மொத்தம் 330.
கல்வித் தகுதி: டிகிரி.
வயது வரம்பு: 28 முதல் 35 வரை.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.10.19.
மேலதிக தகவல்களுக்கு: http://www.fci.gov.in

 தொகுப்பு: டி.ரஞ்சித்