தமிழக மின்வாரியம் வழங்கும் வேலைவாய்ப்பு பயிற்சி!



500 பேருக்கு வாய்ப்பு!

மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து டிப்ளமோ, பி.இ படித்தவர்களுக்கு ஒரு வருடம்  வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கவுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி (TANGEDCO Apprentice 2019) தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  www.tangedco.gov.in  மற்றும் www.boat-srp.com  ஆகிய  இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி:


பட்டப்படிப்பு அளவில் 250 பேர், டிப்ளமோ அளவில் 250 பேர் என மொத்தம் 500 பேர் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். பயிற்சிக்கு  விண்ணப்பிக்க விரும்புவோர் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங்,  எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், சிவில் எஞ்சினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ருமெண்டேஷன் எஞ்சினியரிங்  மற்றும்  கணினி அறிவியல் போன்ற துறைகளில் டிகிரி அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். SC/ ST பிரிவினருக்கு அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு  அனுசரிக்கப்படுகிறது.

பயிற்சி காலம், தொகுப்பூதியம்:

எஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு மாதம் 4,984 ரூபாயும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 3,542 ரூபாயும் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது. பயிற்சி காலம் ஒரு  வருடம் ஆகும். வேலைவாய்ப்பு பயிற்சிக்கான விதிமுறைகளின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:


இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.mhrdnats.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 5.11. 2019. சான்றிதழ் சரிபார்ப்பு நாள் 12.11.2019.

மேலதிக விவரங்களுக்கு www.boat-srp.com  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.  

-துருவா