கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி!



2331 பேருக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் தொடர் இயக்கங்கள் மற்றும் தமிழக அரசின் முன்முயற்சிகள் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்தில்  உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2331 ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் 28.08.2019 அன்று அறிவிப்பு  வெளியிட்டது 04.09.2019ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவேற்றலாம் எனவும் அறிவித்திருந்தது.

ஆனால் 03.09.2019 அன்று, விண்ணப்ப பதிவேற்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. உதவி பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள்  உள்ளதாக எதிர்ப்பு கிளம்பிய நிலையில் விண்ணப்ப தேதி அறிவிப்பை மறுபரிசீலனை செய்யவே ஒத்திவைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தச்  சூழ்நிலையில் தற்போது மீண்டும் புதியதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய அறிவிப்பின்படி தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல்  கல்லூரிகளில் 2,331 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களும் இந்த அக்டோபர் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முதுகலைப் பட்டம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, NET, SLET, SET, SLST, CSIR தேர்வு அல்லது Ph.D., தேர்ச்சி பெற்றவர்கள்,  பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின்படி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பக் கட்டணமாக எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.300, இதர பிரிவினர் ரூ.600 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம்  ஆன்லைன் முறையிலேயே செலுத்த வேண்டும்.

இந்த அறிவிப்பின்படி, தாவரவியல் (89), வேதியியல் (188), கணினி அறிவியல் (137), ஆங்கிலம் (309), புள்ளியியல் (56), விலங்கியல் (100), புவியியல் (68),  வரலாறு (67), வணிகவியல் (102), கணிதம் (192), தமிழ் (231), இயற்பியல்(150), பொருளாதாரம் (92), கல்வியியல் (28), எலெக்ட்ரானிக்ஸ் (26), கம்ப்யூட்டர்  அப்ளிகேஷன் ( 57), கார்ப்பரேட் கெக்ரட்ரிஷிப் (25), அரசியல் அறிவியல் (29) விஷூவல் கம்யூனிகேஷன் (21), புவியியல் (68), ஜியாலஜி (21) உள்பட பல்வேறு  துறைகளில் சுமார் 2,331 பணியிடங்களுக்கான அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி https://www.tn.trb.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்த பின்  தேர்வர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களுக்கு http://trb.tn.nic.in/arts_2019/NotificationNEW.pdf  என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.