உத்வேகம் பிறக்கும்!



கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான NET 2019 தகுதித் தேர்வு குறித்த விவரங்கள் வழிகாட்டும் விதமாக  இருந்தன. பாடப் பிரிவுகள், தேவையான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை என விளக்கமாகக் கொடுக்கப்பட்டது சிறப்பு.
-எஸ்.கலைச்செல்வி, சிவகாசி.
 
இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இ-காமர்ஸ் எனப்படும் ஆன்லைன் வர்த்தகம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் இ-காமர்ஸ் சார்ந்த  தகவல்கள் மற்றும் அதில் சாதிக்கும் வழிமுறைகளையும் விளக்கும் இ-காமர்ஸும் நேரடி வர்த்தகமும் கட்டுரை அருமை. ஆன்லைன் வர்த்தகம் சார்ந்து சாதிக்க  துடிக்கும் இளைஞர்களுக்கு உத்வேகம் பிறக்கும்  விதமாக இருந்தது.
-ஏ.ஜான் சேவியர், நாகர்கோவில்.
 
தலைகீழாகத் திருக்குறள் எழுதியதோடு மட்டுமில்லாமல், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கிரிக்கெட் என பல சாதனைகளைப் படைத்து வீடு  முழுவதும் பதக்கங்களைக் குவித்துவரும் நந்தினிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பல துறைகளில் சாதனை படைக்கும் மாணவ/மாணவிகள் பற்றிய கட்டுரை புதிய  சாதனையாளர்களை ஊக்கப்படுத்தும்.
  -இரா.மதிவாணன், காஞ்சிபுரம்.
 
பொதுத்துறை வங்கிகளில் பணி வாய்ப்புக்கான ஐ.பீ.பி.எஸ். தேர்வு அறிவிப்பு, ONGC நிறுவனம் SC/ST மாணவர்களின் உயர்கல்விக்கு வழங்கும்  உதவித்தொகை, மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு, 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு CISF-ல் வேலை வாய்ப்பு என இளைஞர்களுக்கு பல  பயனுள்ள தகவல்களைத் தந்திருப்பது தனிச்சிறப்பு. தொடரட்டும் கல்வி-வேலை வழிகாட்டியின் சேவை.
  -எம்.கர்ணன், விழுப்புரம்.