மத்திய அரசின் கப்பல்கட்டும் நிறுவனத்தில் வேலை! 1980 பேருக்கு வாய்ப்பு!



*வாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கப்பல் கட்டுமான நிறுவனமான Mazagon Dock Shipbuilders மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், இந்திய அரசின் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு பிரிவில் பல்வேறு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரித்து இந்திய கடற்படைக்கு வழங்கிவருகிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேசத் தரத்திலான கப்பல் கட்டுமானங்களை உருவாக்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான ஆள் சேர்ப்பு நடத்தப்படவிருக்கிறது.


பணிகள்

AC Ref. Mechanic, Compressor Attendant, Brass Finisher, Carpenter, Chipper Grinder, Composite Welder என மொத்தம் 30 பிரிவின் கீழ் சுமார் 1980 பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

தேவையான தகுதி

பல்வேறு பிரிவுகளுக்கு ஆள் சேர்ப்பு நடத்தப்படுவதால் பணிகளுக்கு ஏற்ப பணி தகுதி மாறுபடுகிறது. மேலும் துறை சார்ந்த அனுபவமும் ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபடுகிறது. தேர்ந்தெடுக்கப்போகும் பிரிவில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருப்பது பொதுவான தகுதியாகக் கருதப்படுகிறது. தகுதி விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்கள் 1.8.2019 அன்றின்படி 38 வயதிற்கு மிகாமலும் 18 வயதிற்கு குறையாமலும் இருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு ஐந்து வருடங்களும் OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பிலிருந்து அரசு விதிகளின்படி தளர்வு அனுசரிக்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, பணி அனுபவம் மற்றும் டிரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மெடிக்கல் டெஸ்ட்டிற்கு அனுமதிக்கப்பட்டு பணிக்கு உறுதி செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://mazagondock.in என்ற இணையதளம் சென்று பொதுப் பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி /எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் 5.9.2019. மேலும் விவரங்கள் அறிய https://www.mazagondock.in/Home.aspx என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும். - துருவா