எரிசக்தித் துறை வழங்கும் முதுகலை பட்டயப்படிப்புகள்!



அட்மிஷன்

இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி நிறுவனமான National Thermal Power Corporation  (NTPC) Limited இந்தியாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனமாகும். இது, 1975ல் நிறுவப்பட்டது. இந்திய அளவில் மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் இப்பொதுத்துறை நிறுவனம் எனர்ஜி மேனேஜ்மென்ட் சார்ந்த துறைகளில் கல்வியையும், ஆராய்ச்சிகளையும் வழங்கும் பொருட்டு NSB (NTPC SCHOOL OF BUSINESS) எனும் கல்விநிறுவனத்தை தொடங்கியது. அகமதாபாத்திலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் எனும் கல்விநிறுவனத்துடன் இணைந்து உலகத்தரத்திலான முதுகலை டிப்ளமோ படிப்புகளை வழங்கிவருகிறது. அவ்வகையில் NSB 2019-21 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்

இரண்டுவருட முதுகலைப் படிப்பான Post Graduate Diploma in Management (Energy Management) மற்றும் பதினைந்து மாத அளவிலான Post Graduate Diploma in Management (Executive) போன்ற இரண்டு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

கல்வித் தகுதி

இந்த முதுகலைப் படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் B.E /B.Tech /B.Sc /B.Com என ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டத்தில் 50% தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். எஸ்.சி /எஸ்.டி மாணவர்கள் 45% தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது. இப்பட்டப்படிப்புகளைக் கடைசி ஆண்டு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் பதினைந்து மாத கோர்ஸான PGDM (Executive) தேர்ந்தெடுக்க விரும்புபவர்கள் 30 ஜூன் 2019 நாளின்படி ஐந்துவருடம் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

மாணவர்கள் தங்கள் இளங்கலையில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் CAT/GMAT / XAT போன்ற நுழைவுத்தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுகளுக்கு அழைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://nsbnoida.in/login/ என்ற இணையதளம் சென்று ரூ.1,500 ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 5.4.2019.
மேலதிக விவரங்களுக்கு https://www.ntpc.co.in/en/ntpc-school-business என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

-துருவா