பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் முதுநிலை மாணவர் சேர்க்கை!



செய்தித் தொகுப்பு

புதுடெல்லியில் இயங்கி வரும் ஸ்கூல் ஆஃப் பிளானிங் அண்ட் ஆர்கிடெக்சர் (எஸ்.பி.ஏ.,) கல்வி நிறுவனம் தேசிய முக்கியத்துவம் பெற்ற கல்வி நிறுவனமாகும். இது மத்திய அரசின் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. இதில் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: எம்.ஆர்க். (ஆர்கிடெக்ச்சுரல் கன்சர்வேஷன்), மாஸ்டர் ஆஃப் அர்பன் டிசைன், எம்.டெஸ். (இண்டஸ்ட்ரியல் டிசைன்), எம்.பிளான். (என்விரான்மென்ட்டல் பிளானிங்), எம்.பிளான். (ஹவுசிங்), எம்.பிளான். (ரீஜினல் பிளானிங்), எம்.பிளான். (டிரான்ஸ்போர்ட் பிளானிங்), எம்.பிளான். (அர்பன் பிளானிங்), மாஸ்டர் ஆஃப் லேண்ட்ஸ்கேப் ஆர்கிடெக்சர், மாஸ்டர் ஆஃப் பில்டிங் எஞ்சினியரிங் அண்ட் மேனேஜ்மென்ட்.

தேவையான தகுதிகள்: ஒவ்வொரு முதுநிலைப் படிப்பிற்கும் அத்துறை சார்ந்த பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை 55% மதிப்பெண்ணுடன் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு மதிப்பெண் சதவீதத்தில் 5% வரை விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் எஸ்.பி.ஏ. கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தைக் கல்வி நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.3.2019. நேர்முகத் தேர்வு: 1.4.2019 முதல் 3.4.2019 வரை. மேலும் விவரங்களுக்கு www.spa.ac.in

நர்ஸிங் பட்டயப்படிப்பைப் பட்டப்படிப்பாக மாற்ற திட்டம்!

அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்த 384 இடங்களுக்கான முதுநிலை டிப்ளமோ படிப்புகளைப் பட்ட மேற்படிப்புகளாக மாற்ற இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. இதனால் 2019 - 20க்கான கல்வியாண்டில் 1,758 எம்.டி. - எம்.எஸ். ஆகிய பட்ட மேற்படிப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளன.

இதேபோல டிப்ளமோ நர்ஸிங் படிப்புகளையும் டிகிரி படிப்புகளாக மாற்ற இந்திய நர்ஸிங் கவுன்சில் விதிமுறைகளை வகுத்துள்ளது. வரும் 2020 - 21ம் கல்வியாண்டிற்குள் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளிலுள்ள டிப்ளமோ நர்சிங் இடங்கள் டிகிரி நர்ஸிங் படிப்புகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கான பணிகளில் மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிராஃப்ட் அண்ட் டிசைன் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!
 
ஜெய்ப்பூரில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் கிராஃப்ட் அண்ட் டிசைன் (ஐ.ஐ.சி.டி.) கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.வழங்கப்படும் படிப்புகள்: இண்டக்ரேட்டட் பேச்சுலர் ஆஃப் வொகேஷன் - 4 ஆண்டுகள், இண்டக்ரேட்டட் மாஸ்டர் ஆஃப் வொகேஷன் - 5 ஆண்டுகள், மாஸ்டர் ஆஃப் வொகேஷன் - 2 ஆண்டுகள்.

தேவையான தகுதிகள்: இண்டக்ரேட்டட் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வியை முடித்திருக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 2 ஆண்டு முதுநிலைப் படிப்பிற்குத் துறை சார்ந்த பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது ஓர் ஆண்டு சி.எஃப்.பி.டி. கல்வியினை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஐ.ஐ.சி.டி. கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

மாணவர் சேர்க்கை: தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தியா முழுவதும் 14 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. மாணவர்களின் பொது அறிவு, படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு சார்ந்த கருத்தியல் ஆகியவை தேர்வின் மூலம் சோதிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.3.2019. மேலும் விவரங்களுக்கு www.iicd.ac.in

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க நுழைவுத்தேர்வு!

புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பபடுகின்றன. வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி காலை மாலை என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,97, 745 பேர் தேர்வு எழுதிய நிலையில், இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என ஜிப்மர் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.jipmer.puducherry.gov.in மற்றும் www.jipmer.edu.in ஆகிய இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.4.2019.