வேலை ரெடி!



வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு  அறிவிப்புகள் இங்கே...

சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் வேலை
 
நிறுவனம்: உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஷசஸ்திரா சீமா பால் எனும்
எஸ்.எஸ்.பி-யின்
வேலைவாய்ப்பு அறிவிப்பு
வேலை: அசிஸ்டென்ட் சப் - இன்ஸ்பெக்டர் (ஜெனரல் டியூட்டி) மற்றும் கான்ஸ்டபிள்(டிரேட்ஸ்மேன்) வேலைகள்
காலியிடங்கள்: மொத்தம் 60
கல்வித் தகுதி: டிகிரி
வயது வரம்பு: 32க்குள்
தேர்வு முறை: எழுத்து, உடல் அளவு, உடற்
திறன் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 1.4.19
மேலதிக தகவல்களுக்கு: www.ssb.nic.in

தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் வேலை!

நிறுவனம்: டி.என்.எம்.ஆர்.பி எனப்படும் தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழக மருத்துவமனைகளில் ஃபார்மசிஸ்ட் ஆகப் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு
வேலை: ஃபார்மசிஸ்ட்
காலியிடங்கள்: மொத்தம் 353
கல்வித் தகுதி: ஃபார்மசி துறையில் டிப்ளமோ படிப்பு
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
தேர்வு முறை: கல்வி மற்றும் தொழிநுட்பத் திறன் ஆய்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.3.19
மேலதிக தகவல்களுக்கு: www.mrb.tn.gov.in

யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க்
வேலை: சிறப்பு அதிகாரிகள் எனும் ஸ்பெஷலைஸ்டு ஆபிசர் வேலை. இதில் பல்வேறு துறைகளில் வேலை ஒதுக்கப்பட்டுள்ளது
காலியிடங்கள்: மொத்தம் 181. இதில் ஃபையர் ஆபிசர் 1, எகானமிஸ்ட் 6, செக்யூரிட்டி ஆபிசர் 19, இன்டகிரேட்டர் ட்ரஷரி ஆபிசர் 15, கிரெடிட் ஆபிசர் 122 மற்றும் ஃபாரக்ஸ் ஆபிசர் 18 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு: வங்கி விதிகளின்படி
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.3.19
மேலதிக தகவல்களுக்கு: www.unionbankofindia.co.in

வனத்துறை அதிகாரி பணி!
 
நிறுவனம்: யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான இது ஐ.எஃப்.எஸ் எனப்படும் இண்டியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் எனப்
படும் வனத்துறை அதிகாரிகளுக்கான தேர்வுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
வேலை: வன இலாகா அதிகாரி
காலியிடங்கள்: அகில இந்திய அளவிலான இந்தத் தேர்வில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மொத்தம் 90
கல்வித் தகுதி: அனிமல் ஹஸ்பண்டரி,
வெட்னரி சயின்ஸ், பாட்டனி, கெமிஸ்ட்ரி, ஜுவாலஜி, கணிதம், எஞ்சினியரிங், விவசாயம், ஃபாரஸ்ட்ரி போன்ற அறிவியல் படிப்புகளில் டிகிரி முடித்
திருக்கவேண்டும்
வயது வரம்பு: 21 முதல் 32 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.3.19
மேலதிக தகவல்களுக்கு: www.upsconline.nic.in

பட்டதாரிகளுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை!
 
நிறுவனம்: எல்.ஐ.சி. எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை
வேலை: அசிஸ்டென்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபிசர்
காலியிடங்கள்: மொத்தம் 590. ஐ.டி, சார்ட்டட் அக்கவுன்டன்ட், ஜெனலிஸ்ட், ஆக்சுவேரியல்
மற்றும் ராஜ்பாஷா எனும் 5 பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்படும்
கல்வித் தகுதி: டிகிரி மற்றும் பி.ஜி. டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைகள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: 21 முதல் 30 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 22.3.19
மேலதிக தகவல்களுக்கு: www.licindia.in

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் பணி

நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
வேலை: சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவிப் பொறியாளர், உதவியாளர் மற்றும் தட்டச்சர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 224. உதவிப் பொறி
யாளர் 73, சுற்றுச்சூழல் விஞ்ஞானி 60, உதவி
யாளர் 36, தட்டச்சர் 55
கல்வித் தகுதி: உதவிப் பொறியாளர் பணிக்கு சிவில், கெமிக்கல் எஞ்சினியரிங் பட்டப்படிப்பு, முதுநிலை என்விரான்மென்டல் எஞ்சினியரிங், கெமிக்கல் எஞ்சினியரிங், என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, பெட்ரோலியம் ரீபைனரிங் படித்திருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட 12 விதமான அறிவியல் படிப்புகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு இளநிலை பட்டப்படிப்புகளுடன் கணினி படிப்பில் சான்றிதழ் பெற்றவர்களும், தட்டச்சர் பணிக்கு பட்டப்
படிப்புடன் தட்டச்சு சான்றிதழ், கணினி படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 18 முதல் 30 வரை. குறிப்பிட்ட பிரிவினருக்கு 5 வருட வயது வரம்புத் தளர்வு உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.3.19
மேலதிக தகவல்களுக்கு: www.tnpcb.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்