வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி.  இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலை!

நிறுவனம்: சவுத் ஈஸ்டர்ன் ரயில்வே
வேலை: ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் கூட்ஸ் கார்டு எனும் இரு பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 410. இதில் முதல் வேலையில் 125, இரண்டாம் வேலையில் 285 காலியிடங்கள் உள்ளன
கல்வித்தகுதி: இரண்டு வேலைகளுக்குமே டிகிரி அவசியம். இத்தோடு இரண்டு வேலைகள் தொடர்பாக மேலதிக படிப்பு படித்தவர்களுக்கு இந்த வேலைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு: 42க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, மருத்துவச் சோதனை மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.8.17
மேலதிக தகவல்களுக்கு: www.ser.indianrailways.gov.in

10வது படிப்புக்கு ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: இந்திய ராணுவத்தின் கீழ் வரும் ராணுவத்துக்குத் தேவையான துப்பாக்கி மருந்துத் தொழிற்சாலையான ஃபீல்டு
அம்யூனிஷன் டெப்போவின் பாரத்பூர் கிளை
வேலை: 2 பிரிவுகளில் உள்ளது. 1. டிரேட்ஸ்மேன், 2. ஃபையர்மேன்
காலியிடங்கள்: மொத்தம் 323. இதில் முதல் வேலையில்
மட்டுமே 319 இடங்களும், இரண்டாவது வேலையில் 4 இடங்களும்
உள்ளன.
கல்வித்தகுதி: இரண்டு வேலைக்குமே 10வது படிப்பு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.8.17
மேலதிக தகவல்களுக்கு:www.indianarmy.nic.in

உணவுக் கழகத்தில் வாட்ச்மேன் வேலை!

நிறுவனம்: ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா
வேலை: இந்த நிறுவனத்தின் மூன்று மாநிலங்களில் உள்ள கிளைகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்
பட்டுள்ளது. எல்லாவற்றிலுமே வாட்ச்மேன் வேலை காலியாக உள்ளது
காலியிடங்கள்: ஆந்திரா 271, ராஜஸ்தான் 281 மற்றும் தமிழ்நாடு 55 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: 8வது படிப்பு
வயது வரம்பு: 18-25
தேர்வு முறை: எழுத்து மற்றும் உடல் திறன்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஆந்திரக் கிளைக்கு 21.8.17, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் கிளை
களுக்கு 7.8.17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மேலதிக தகவல்
களுக்கு: www.fci.gov.in

தேசிய தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில் வேலை

நிறுவனம்: நேஷனல் டெக்னிக்கல் ரிசர்ச் ஆர்கனைசேஷன் எனும் மத்திய அரசின் தொழில்நுட்ப ஆய்வுக்கான நிறுவனம்
வேலை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: மொத்தம் 99. இதில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 60 இடங்களும், கம்ப்யூட்டர் துறையில் 39 இடங்களும் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: முதல் வேலைக்கு பி.எஸ்சி பட்டப்படிப்பில் அறிவியல் பாடங்களை எடுத்தோ அல்லது எஞ்சினியரிங் டிப்ளமோ படித்திருக்கவேண்டும். இரண்டாவது வேலைக்கு பி.எஸ்சி-யில் அறிவியல் பாடங்களை எடுத்து படித்தோ அல்லது கம்ப்யூட்டர் படிப்பில் இளங்கலையோ முடித்திருக்கவேண்டும்.
வயது வரம்பு: 30க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு.
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.8.17
மேலதிக தகவல்களுக்கு: www.ntro.gov.in

நுண்ணறிவு தொடர்புத் துறையில் வேலை

நிறுவனம்: இண்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம் இண்டியா லிமிடெட் எனும் நுண்ணறிவு அடிப்படையிலான தொடர்புச் சாதனத் துறையின் நியூடெல்லி கிளை
வேலை: நர்சிங் ஆர்டர்லி, ஸ்வீப்பர் கம்
சவ்கிதார் மற்றும் சானிடேஷன்  ஒர்க்கர் எனும் 3 பிரிவில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 861. இதில் முதல் வேலையில் 264, இரண்டாம் வேலையில் 516, மூன்றாம் வேலையில் 81 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித்தகுதி: 8வது படிப்பு
வயது வரம்பு: 18-55
தேர்வு முறை: வேலை அனுபவ அடிப்படையில்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10.8.17
மேலதிக தகவல்களுக்கு: www.icsil.in

ஏர் இந்தியாவில் அசிஸ்டென்ட் சூப்பர்வைசர் பணி!

நிறுவனம்: ஏர் இந்தியாவின் எஞ்சினியரிங் தொடர்பான வேலைகளைச் செய்யும் ஏர் இந்தியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட்
வேலை: அசிஸ்டென்ட் சூப்பர்வைசர்
காலியிடங்கள்: மொத்தம் 85. இதில்
எஸ்.சி 12, எஸ்.டி 6, ஓ.பி.சி 22 மற்றும் பொதுப் பிரிவுக்கு 45 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரியுடன் டேட்டா என்ட்ரி அல்லது கம்ப்யூட்டரில் ஒருவருட சான்றிதழ் படிப்பு
வயது வரம்பு: 33க்குள்
தேர்வு முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.8.17
மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in

ஐ.டி.ஐ. படிப்புக்கு ICF- ல் வேலை!

நிறுவனம்: இந்திய ரயில்வேயின் ஒரு
பிரிவான சென்னையில் உள்ள ரயில்பெட்டித் தொழிற்சாலையான ஐ.சி.எஃப் எனும் இண்டக்கிரல் கோச் ஃபேக்டரியில் வேலை. இந்த வேலைகள் அப்ரண்டீஸ் அடிப்படையிலானது
வேலை: எலக்ட்ரிஷியன், கார்பெண்டர்,
ஃபிட்டர் உட்பட 8 துறைகளில் வேலை
கல்வித்தகுதி: வேலை தொடர்பாக ஐ.டி.ஐ முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 15-24
தேர்வுமுறை: மெரிட் மற்றும் உடற்தகுதித் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 21.8.17
மேலதிக தகவல்களுக்கு: www.icfindianrailways.gov.in

தொகுப்பு: டி.ரஞ்சித்