BUSINESS MANAGEMENT சர்வதேச இளநிலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற விரும்புகிறீர்களா?



வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு!!

இங்கிலாந்தின் வடகிழக்குப் பகுதியில் இயங்கிவரும் ‘யுனிவர்சிட்டி ஆஃப் சன்டர்லேண்ட்’உலக அளவில் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று. இக்கல்வியாண்டில் (2017-18) சென்னையில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கி வரும் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் 82 நாடுகளைச் சேர்ந்த பதிமூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டியங்கும் சிங்கப்பூரில் உள்ள மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சிங்கப்பூர் (MDIS) ஆகிய நிறுவனங்களை இணைத்து, பி.ஏ. (ஹானர்ஸ்) அக்கவுன்டிங் அண்டு ஃபினான்சியல் மேனேஜ்மென்ட் மற்றும் பி.ஏ. (ஹானர்ஸ்) பிசினஸ் அண்டு மார்க்கெட்டிங் போன்ற இளநிலைப் படிப்புகளைப் பயில வாய்ப்பளிக்கிறது.

இந்தியா (சென்னை) சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் பயில்வதற்கான இந்த அரிய வாய்ப்பினை பெறுவதற்குரிய மாணவர் சேர்க்கை சென்னை வேல்ஸ் யுனிவர்சிட்டியில் தற்போது நடந்து வருகிறது.உயர்கல்வி உலகத்தரம் வாய்ந்த மாணவர்களை உருவாக்கும் வகையில் செயல்வழிக் கற்றல் மற்றும் ஆராய்ச்சி நிலைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் உலகப் பொருளாதாரத்தையே கட்டமைக்கும் அமெரிக்காவின் நியூயார்க் நகர வால்ஸ்ட்ரீட்டிற்கு (wall street) மாணவர்களை இன்டர்ன்ஷிப்பிற்காக அழைத்துச் செல்வது இப்பட்டப்படிப்பின் சிறப்பம்சம் ஆகும்.

இளநிலைப் பட்டப்படிப்பு சன்டர்லேண்ட் பல்கலைக்கழகம், இந்த அரிய வாய்ப்பின் வழியாக B.A. (Hons.) - Business and Marketing Management துறைக்கான இளநிலைப் பட்டப் படிப்பை கால அடிப்படையில் மூன்று கட்டங்களாகப் பிரித்து இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் பயில்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது. அந்த வகையில் முதல் ஏழு மாத டிப்ளமோ படிப்பான டிப்ளமோ இன் பிசினஸ் ஸ்டடீஸ், ஆறு மாத படிப்பான அட்வான்ஸ்டு
டிப்ளமோ இன் பிசினஸ் ஸ்டடீஸ் ஆகிய அடிப்படைப் பொருளாதாரக் கல்வியைச் சென்னையின் வேல்ஸ் யுனிவர்சிட்டியில் பயிலலாம். அடுத்த ஒன்பது மாத கால படிப்புகளை சிங்கப்பூரின் ‘மேனேஜ்மென்ட் டெவலப்மென்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சிங்கப்பூர் (MDIS)’ கல்வி நிறுவனத்தில் பயிலலாம்.

கல்விக் கட்டணம்

உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியாக இப்பட்டப் படிப்பினைப் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் ஏழு மாத காலப் பருவப் படிப்பிற்கு ரூ.1,50,000 அடுத்த ஆறு மாத காலப் பருவப் படிப்பிற்கு ரூ.1,50,000 மற்றும் சிங்கப்பூரில் ஒன்பது மாத காலப் பருவப் படிப்பிற்கு ரூ.3,82,500 என மொத்தம் ரூ. 6,82,500 மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணமாகப் பெறப்படுகிறது. மேலும் ஹாஸ்டல் மற்றும் உணவிற்குத் தனியே கட்டணம் பெறப்படுகிறது.

கல்வித் தகுதிகள்

பிசினஸ் துறையில் உலகத் தரம் வாய்ந்த இந்த இளநிலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கில வழி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்தியாவில் 13 மாதமும் மற்றும் சிங்கப்பூரில் 9 மாதமும் பயிலக்கூடிய இந்த இளநிலைப் பட்டப் படிப்பிற்கு ஆன்லைனில் உள்ள விண்ணப்பத்தினைத் தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களைப் பெற http://www.velsuniv.ac.in/mdis-vels/index.asp என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
முதுகலைப் பட்டப்படிப்பு (MBA)இங்கிலாந்தில் உள்ள சன்டர்லேண்ட் பல்கலைக்கழகம் வழங்கும் முதுகலை (நிலை) வணிக நிர்வாகவியல் பட்டப்படிப்பு முதல் நான்கு மாதங்கள் சிங்கப்பூரில் பயிலலாம். அடுத்த எட்டு மாதங்கள் இந்தியாவில் வேல்ஸ் பல்கலையில் பயில்வதற்கு வாய்ப்பளிக்கப்படும். இந்தக் கல்வியாண்டிற்கான  (2017 - 18) மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

இப்பட்டப்படிப்பின் முதல் பருவத்தினை (நான்கு மாத காலம்) சிங்கப்பூரில் உள்ள புகழ்வாய்ந்த `MDIS’ கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயில்வதற்கான அரிய வாய்ப்பினைப் பெறலாம். முதல்பருவத்தில்: ஃபினான்சியல் மேனேஜ்மென்ட் அண்டு கன்ட்ரோல், மேனேஜிங் அண்டு லீடிங்
ஃபீப்புள், மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட் புராஜக்ட் மேனேஜ்மென்ட் போன்ற பாடங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெறும்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவங்களைச் சென்னையில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயில்வதற்கான வாய்ப்பினைப் பெறலாம்.

இரண்டாம் பருவத்தில்: ஆபரேஷன் மேனேஜ்மென்ட், இன்டர்நேஷனல் பிசினஸ் என்விரான்மென்ட், மேனேஜிங் இன்னோவேஷன் அண்டு டெக்னாலஜி டிரான்ஸ்பர், குளோபல் கார்ப்பரேட் ஸ்ட்ராட்டஜி போன்ற பாடங்கள் பாடத்திட்டத்தில் இடம்பெறும். மூன்றாம் பருவத்தில்: விளக்கவுரை மேலிட்ட பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படும். இவ்விளக்கவுரை அமர்வுகள் ஸ்கைப் வழியாக மாணர்வகளை எளிதில் சென்றடைய வழியேற்படுத்தப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆக்ஸிஸ் (AXIS BANK) வங்கியின் மூலம் கல்விக்கடன் பெற்றுத்தரப்படும்.
MBA கல்வித் தகுதிகள்

1. இளநிலை பட்டப்படிப்பு
2. 6 மாதக் கால Work Experience

தொடர்பு கொள்ள:
VELS UNIVERSITY
Velan Nagar,
P.V.Vaithialingam Road, Pallavaram,
Chennai - 600 117.
e-mail: mdisvels@velsuniv.ac.in
Mobile: 99625 06359