அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Daniel come to judgement


அலுவலகத்தில் எல்லோரும் மும்முரமாகப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரகுவை நோக்கி வேகமாக வந்த ரவி “சார், ‘Daniel come to judgement’ இதுல என்னங்க சார் தப்பு?” என்றபடியே சேரில் அமர்ந்தான்.

ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்த ரகு, “எங்கயிருந்து உனக்கு இந்த மாதிரி சந்தேகம் எல்லாம் வருது ரவி?” எனக் கேட்டார். உடனே ரவி, “ஒண்ணுமில்லைங்க சார். என் நெஃப்யு ஒருத்தன் போட்டித் தேர்வுகள் எழுதறான். நான் உங்களைப் பத்தி ஏற்கனவே அவன்கிட்ட சொல்லியிருக்கேன். அவன்தான் உங்ககிட்ட கேட்கச் சொன்னான்” என்றான்.

 “குட். ‘A Daniel come to judgement’ என்று வரவேண்டும். இந்த வாக்கியம் ஷேக்ஸ்பியரோட ‘மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸ்’ என்ற நாடகத்தில் ‘ஷைலக்’ என்கிற மீட்டர் வட்டிக்காரன் பேசும் வசனம்” என்றார் ரகு. “ஓ… அப்படிங்களா சார்…. அப்படின்னாலும் comes என்றோ அல்லது has come என்றோதானே வந்திருக்க வேண்டும்” என்று தன் சந்தேகத்தை வெளிப்படுத்தினான் ரவி.

உன்னோட சந்தேகம் மிகச் சரிதான் ரவி. ஆனா இது இலக்கிய வரி. அதை ‘A Daniel come to judgement’ என்றுதான் எழுதணும். ஆனால், ‘A Daniel has come to judgement’ என்று புரிந்துகொள்ள வேண்டும். அவ்வளவுதான்” என்ற ரகுவைத் திருப்தியில்லாத ஒரு பார்வை பார்த்தான் ரவி.

இதைப் புரிந்துகொண்ட ரகு, “என் பதிலில் உனக்குத் திருப்தி இல்லை போலிருக்கிறது. சரி. இன்றைய ஆங்கிலச் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் வந்த ஒரு செய்தியைப் பார்த்தாயா? அதில் ‘Four people killed in plane crash’ என வந்திருக்கிறது. அது இலக்கண முறைப்படி ‘Four people were killed in plane crash’ என்றுதான் வந்திருக்க வேண்டும்.

ஆனால், அது Journalistic English. அதைப் போல இது Shakespearen English… புரியுதா ரவி” என்றார். ‘‘Yes sir. Now I understand but ‘a’ என்ற ஒற்றை எழுத்து எப்படி இவ்வளவு பெரிய வித்தியாசத்தை உருவாக்குகிறது என்பதுதான் புரியவில்லை” என்றான் ரவி. “அதுக்கு ‘Merchant of Venice’ என்ற அந்த நாடகத்தின் கதையாவது தெரிந்திருந்தால்தான் உனக்குப் புரிய வைக்க முடியும்.

அதிலும் முக்கியமா போர்ஷியா என்ற கதாபாத்திரத்தைப் புரிந்துகொண்டால் ஷைலக் ஏன் இப்படிச் சொன்னான் என்று புரிந்துவிடும். அதனால் ஒருமுறை ஷேக்ஸ்பியரின் நாடகத்தைப் படித்துப்பார். சரி…. See you tomorrow” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்குத் தொடர்புகொள்ள:      englishsundar19gmail.com                                  

சேலம் ப.சுந்தர்ராஜ்