வாய்ப்புகள்
வேலை ரெடி!
 10வது படிப்புக்குக் காவல்படையில் வேலை
நிறுவனம்: அசாம் ரைஃபிள்ஸ் காவல்படை வேலை: ஜெனரல் டியூட்டி, கிளர்க், பெர்சனல் அசிஸ்டென்ட் உள்ளிட்ட சில பிரிவுகளில் வேலை காலியிடங்கள்: 91. இதில் ஜெனரல் டியூட்டியில் 61(ஆண்களுக்கு 45, பெண்களுக்கு 16), கிளர்க் 6 மற்றும் பெர்சனல் அசிஸ்டென்ட் 1 என காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: 10ம் வகுப்பு படிப்புடன் தட்டச்சும், சுருக்கெழுத்துத் திறனும் தேவை. வயது வரம்பு: 38 விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.2.17 மேலதிக தகவல்களுக்கு: www.assamrifles.gov.in
ஜிப்மரில் சீனியர் ரெசிடெண்ட் பணி
நிறுவனம்: ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் ரிசர்ச்(ஜிப்மர், பாண்டிச்சேரி) வேலை: சீனியர் ரெசிடெண்ட் வேலை காலியிடங்கள்: 75 (ஒப்பந்தப் பணி) கல்வித்தகுதி: மருத்துவத்தில் முதுகலை (அ) டாக்டரேட் படிப்பு வயது வரம்பு: 33-35 தேர்வு முறை: பிப்ரவரி 15-16 எனும் இரு தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வு. மேலதிக தகவல்களுக்கு: www.jipmer.edu.in
கடற்படையில் ஃபயர்மேன் பணி
நிறுவனம்: இந்தியக் கடற்படை (மகாராஷ்டிரா கிளை) வேலை: ஃபையர்மேன் எனும் தீயணைப்புப் பிரிவு வேலை காலியிடங்கள்: 62 கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி தேர்வு முறை: உடற் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.2.17 மேலதிக தகவல்களுக்கு: www.indiannavy.nic.in
விவசாயப் படிப்புக்கு வங்கியில் வேலை
நிறுவனம்: இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா வேலை: ஸ்பெஷலைஸ்ட் ஆஃபிசர் எனும் சிறப்பு அதிகாரிகள் காலியிடங்கள் மொத்தம் 111. இதில் டெபுடி ஜெனரல் மேனேஜர் 13, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 17, மேனேஜர் 81 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: விவசாயம் (அ) கால்நடை தொடர்பான படிப்பில் முதல்தர டிகிரி (அ) முதுகலைப் படிப்பில் முதல்தரத் தேர்ச்சி. வயது வரம்பு: 20-45 சில பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு தேர்வு முறை: குழு விவாதம், எழுத்துத் தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.2.17 மேலதிக தகவல்களுக்கு: www.idbi.com
பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் அதிகாரி பணி
நிறுவனம்: இந்திய ராணுவம் (என்.சி.சி. ஸ்பெஷல் என்ட்ரி) வேலை: பொது அதிகாரிகள், வார்ட்ஸ் ஆஃப் பேட்டல் அதிகாரிகள் எனும் இரு பிரிவு களில் மணமாகாத ஆண்களும் பெண்களும் தகுதியானவர்கள். காலியிடங்கள்: மொத்தம் 54. பொது அதிகாரிகள்(ஆண்) என்பதில் 45, வார்ட்ஸ் ஆஃப் பேட்டிலில் 5, பொது அதிகாரி களாக (பெண்) 3, வார்ட்ஸ் ஆஃப் பேட்டிலில் 1 எனக் காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது வரம்பு: 19-25 தேர்வுமுறை: நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.2.17 மேலதிக தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in
ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு டெக்னீஷியன் வேலை
நிறுவனம்: மத்திய அரசின் அணுமின்சார பாதுகாப்பு நிறுவனமான பாரதிய நபிக்யா வித்யூத் நிகாம் லிமிடெட்(தமிழகக் கிளை) வேலை: டெக்னீஷியன் காலியிடங்கள்: 70. இதில் டெக்னீஷியன் ‘பி’ பிரிவில் 66, டெக்னீஷியன் ‘சி’(பாய்லர் அட்டன்டென்ட்) பிரிவில் 4 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: 10ம் வகுப்பில் அறிவியல், கணிதப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஐ.டி.ஐ. சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 25 தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.2.17 மேலதிக தகவல்களுக்கு: http://www.bhavini.nic.in
|