செய்தித் தொகுப்பு



கேம்பஸ் நியூஸ்

+2, 10ம் வகுப்புப் பொதுத் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு!

2016 - 17ம் ஆண்டிற்கான +2 பொதுத் தேர்வுகள் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குவதற்கான தேதிகளைப்  பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. +2 தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு முடிகிறது.

+2 தேர்வுத் தேதிகள்

மார்ச்2         முதல் தாள்
மார்ச் 3     இரண்டாம் தாள்
மார்ச் 6     ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 7     ஆங்கிலம் இரண்டாம்தாள்
மார்ச் 10     வணிகம் / குடும்ப அறிவியல்/ புவியியல்
மார்ச் 13     வேதியியல் / கணக்குப் பதிவியல்
மார்ச் 17     இந்திய கலாச்சாரம்/ கணினி அறிவியல் / உயிரி வேதியியல்/ சிறப்புத் தமிழ் / சிறப்பு ஆங்கிலம்
மார்ச் 21     இயற்பியல் / பொருளியல்
மார்ச் 24     அரசியல் அறிவியல்/ நர்சிங்/ புள்ளியியல்
மார்ச் 27     கணிதம்/ விலங்கியல் / நுண் உயிரியல் ஊட்டச்சத்து / உணவியல்
மார்ச் 31     உயிரியல் / வணிகக் கணிதம் / வரலாறு / தாவரவியல்
  
10ம் வகுப்புத் தேர்வுத் தேதிகள்

மார்ச் 8     தமிழ் முதல்தாள்
மார்ச் 9     தமிழ் இரண்டாம்தாள்
மார்ச் 14     ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 16     ஆங்கிலம் இரண்டாம்தாள்
மார்ச் 20     கணிதம்
மார்ச் 23     அறிவியல்
மார்ச் 28     சமூகஅறிவியல்

தமிழக விஞ்ஞானிக்கு தேசிய விருது!

இந்திய மக்கள்தொடர்பு கவுன்சில் சார்பில் 7-வது சர்வதேசத் தகவல் தொடர்பு மாநாடு சமீபத்தில் ஆந்திரத் தலைநகர் ஐதராபாத்தில்  நடைபெற்றது. இந்த மாநாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி ஜெ.டேனியல் செல்லப்பாவுக்கு சிறந்த மக்கள் தொடர்புப் பணிச் சேவைக்கான தேசிய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்திய தேர்தல் கமிஷனர் எச்.எஸ். பிரம்மா இந்த விருதை வழங்கி கௌரவித்தார். பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானியான டேனியல் செல்லப்பா, இந்திய அணுசக்தித் துறையில் 1984-ம் ஆண்டுப் பணியில் சேர்ந்தார். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் அணு உலைக்குப் பயன்படுத்தப்படும் பிரத்யேக யுரேனியம்-புளூட்டோனியம் கலந்த கார்பைடு எரிபொருளை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தார்.
அணுசக்தி குறித்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

+2 முடித்தவர்கள் வடிவமைப்பில் பட்டம் படிக்கலாம்!

மகாராஷ்டிராவில் உள்ள எம்.ஐ.டி. வடிவமைப்புக் கல்வி நிறுவனத்தில் 2017ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள்: பி.டிசைன், பி.டிசைன், பேஷன் புரோகிராம், எம்.டிசைன், எம்.பி.ஏ.(ஃபேஷன் மேனேஜ்மென்ட்  அண்டு மார்க்கெட்டிங் மற்றும்  டிசைன் மேனேஜ்மென்ட்)கல்வித்தகுதி: இளநிலைப் பட்டப்படிப்பிற்கு +2வில் தேர்ச்சி. முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: டிசைன் ஆப்டிடியூட் டெஸ்ட் எனும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.1.2017
மேலும் விவரங்களுக்கு: www.mitid.edu.in

பி.இ., பி.டெக். படித்தவர்கள் பிசினஸ் அனலடிக்ஸ் படிக்கலாம்

இந்தியன் ஸ்டேடிஸ்டிகல் இன்ஸ்டிடியூட் (ஐ.எஸ்.ஐ.)- பெங்களூரு, ஐ.ஐ.டி.,- காரக்பூர் மற்றும் ஐ.ஐ.எம்.,- கொல்கத்தா ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் பிசினஸ் அனலடிக்ஸ் (பி.ஜி.டி.பி.ஏ.,) படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் பி.எஸ்., பி.டெக்., பி.இ. மற்றும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

சேர்க்கை முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.1.2017
மேலும் விவரங்களுக்கு: www.isical.ac.in