உயிர்த் தொழில்நுட்பவியல் படிப்புக்கு உலகமெல்லாம் வேலை!



தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகளில் நடைபெறும் உயிர்ச் செயல்களை, மனிதன் மற்றும் பிற உயிரினங்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்காக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் கல்வியே ‘உயிர்த் தொழில்நுட்பவியல்’ எனப்படுகிறது. ஏராளமான வேலைவாய்ப்புகளைக் கொண்ட இத்துறையில் உள்ள உயர்கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றிச் சொல்கிறார் ‘இன்ஸ்பையர் ஃபெல்லோ’ முனைவர் உதயகுமார்.

உலகின் உணவுத்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனித இனத்தைத் தவிர உலகிலுள்ள பிற உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. விவசாய நிலங்களின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. இந்தச் சூழலை மாற்றி உயிர்ச்சூழலை சமப்படுத்த உயிர்த் தொழில்நுட்பவியல்   (ஙிவீஷீஜிமீநீலீஸீஷீறீஷீரீஹ்)   ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். உணவு உற்பத்தியை அதிகரித்தல், உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல், குறைந்த பரப்பில் அதிக அளவு உணவு உற்பத்தியை உருவாக்குதல் ஆகியவை உயிர்த் தொழில்நுட்பவியல் ஆய்வுகளால் சாத்தியமாகும்.

உயிர்த் தொழில்நுட்பவியலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருந்துகள் உருவாக்கம், சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துதல், மண்ணின் மாசுபாட்டைக் களைதல், சிறந்த பண்புகளுடைய உயர்ரக தாவரங்கள் மற்றும் விலங்குகளை உருவாக்குதல் ஆகியவை இன்றைய தேவைகளுள் சில.  மனிதனின் வாழ்க்கையையும், மற்ற உயிரினங்களின் வாழ்க்கையையும் செம்மையுறச் செய்யும் இத்துறையை தாராளமாக மாணவர்கள் தேர்வு செய்யலாம்.

உயிர்த் தொழில்நுட்பவியல் சார்ந்த படிப்புகள்
B.Sc.  Biotechnology
M.Sc. Biotechnology
B.S. Biotechnology
M.S. Biotechnology
B.Tech  Biotechnology
M.Tech  Biotechnology
Ph.D.  Biotechnology
D.Phil. Biotechnology
Diploma in Biotechnology
  உயிர்த் தொழில்நுட்பவியல்
துறையிலுள்ள பிரிவுகளுள் சில...
* தாவர உயிர்த் தொழில்நுட்பவியல்
* விலங்கு உயிர்த் தொழில்நுட்பவியல்
* நுண்ணுயிர்த் தொழில்நுட்பவியல்
* பூஞ்சை உயிர்த் தொழில்நுட்பவியல்
* மரபுப் பொறியியல்
* டி.என்.ஏ தொழில்நுட்பவியல்
* டி.என்.ஏ மறுசேர்க்கை நுட்பவியல்
* தாவரத் திசுவியல்
* விலங்குத் திசுவியல்
* எதிர்ப்புத்திறன் தொழில்நுட்பவியல்
* மானுட மரபியல்
* வேளாண் உயிர்த் தொழில்நுட்பவியல்
* ஜீன் பரிமாற்ற உயிரியல்
* காட்டு உயிர்த் தொழில்நுட்பவியல்
* நொதி நுட்பவியல்
தமிழகத்தில் உயிர்த் தொழில்நுட்பவியல் சார்ந்த
ஆய்வுகளை மேற்கொள்ளும் சிறந்த ஆய்வு
நிறுவனங்களுள் சில...
* உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, சென்னை
பல்கலைக்கழகம், சென்னை.
* சென்டர் ஆஃப் பயோ டெக்னாலஜி, அண்ணா
பல்கலைக்கழகம், சென்னை.
* உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, எஸ்.ஆர்.எம்.
பல்கலைக்கழகம், சென்னை.
* வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலூர்.
* உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
* உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
* உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி.
* தமிழ்நாடு அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், கோவை.
* உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகம், புதுச்சேரி.
* உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, சென்னை.
இந்தியாவில் உயிர்த் தொழில்நுட்பவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் சிறந்த ஆய்வு நிறுவனங்களுள் சில...
* இண்டியன் அக்ரிகல்ச்சுரல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், புது டெல்லி.
* டிபார்ட்மென்ட் ஆஃப் பயோடெக்னாலஜி, புது டெல்லி.
* ராஜீவ்காந்தி சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி, திருவனந்தபுரம்.
* மீரட் யுனிவர்சிட்டி, மீரட்.
* டெல்லி யுனிவர்சிட்டி, புது டெல்லி.
* பனாரஸ் ஹிந்து யுனிவர்சிட்டி, வாரணாசி.
* இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு.
* நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிகல் சயின்ஸ்,
பெங்களூரு.
* ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன்.
* கர்நாடகா யுனிவர்சிட்டி, கர்நாடகம்.
உயிர்த் தொழில்நுட்பவியல் துறை சார்ந்து வேலைவாய்ப்புகளை வழங்கும்
நிறுவனங்களுள் சில...
* டிபார்ட்மென்ட் ஆஃப் பயோ டெக்னாலஜி, புது டெல்லி.
* டிபார்ட்மென்ட் ஆஃப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜி, புது டெல்லி.
* சென்ட்ரல் ட்ரக் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், லக்னோ.
* நேஷனல் பொட்டானிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், லக்னோ.
* சென்டர் ஆஃப் பயோடெக்னாலஜி, அண்ணா
பல்கலைக்கழகம், சென்னை.
* ராஜீவ்காந்தி சென்டர் ஃபார் பயோ டெக்னாலஜி,
திருவனந்தபுரம்.
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், எஜுகேஷன் அண்டு ரிசர்ச், திருவனந்தபுரம்.
* இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஐ.ஐ.டி-க்கள்.
* ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், டேராடூன்.
* பயோகான், பெங்களூரு மற்றும் உயிர்த் தொழில் நுட்பவியல் சார்ந்த துறைகளைக் கொண்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் ஆய்வு நிறுவனங்கள்.
உயிர்த் தொழில்நுட்பவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் உலகிலுள்ள சிறந்த ஆய்வு நிறுவனங்களுள் சில...
* யுனிவர்சிட்டி ஆஃப் நெப்ராஸ்கா, அமெரிக்கா.   (http://www.unl.edu/)
* அடிலெய்டு பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா ( www.adelaide.edu.au)
*  யுனிவர்சிட்டி ஆப் விஸ்கான்சின் - மேடிசன்,
அமெரிக்கா (www.wisc.edu)
* குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா  (www.uq.edu.au)
* நெவாடா பல்கலைக்கழகம், அமெரிக்கா
(www.unr.edu)
* ஹார்வர்டு பல்கலைக்கழகம், அமெரிக்கா
(www.harvard.edu)
* ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து 
(www.ox.ac.uk/)  
* கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
(www.cam.ac.uk/)
* டெக்ஸாஸ் பல்கலைக்கழகம், அமெரிக்கா  
(www.utexas.edu/)
* யுனிவர்சிட்டி ஆப் கென்டக்கி, அமெரிக்கா  
(www.uky.edu/)   உயிர்த் தொழில்நுட்பவியல் துறை
மாணவர்களின் ஆய்வுகளுக்கு உதவிகள் செய்யவும், அவர்களின் ஆராய்ச்சிக்கு
உலக அங்கீகாரம் பெற்றுத் தரவும் துறை சார்ந்த வல்லுனர்களால் தொடங்கப்பட்டுள்ள
அமைப்புகள்/குழுக்கள்...

* பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி அசோசியேசன்   (www.bio.org/)
* வாஷிங்டன் பயோடெக்னாலஜி - பயோமெடிக்கல் அசோசியேசன்   (www.washbio.org/)
*  ஆஸ்திரேலியா பயோடெக்னாலஜி ஆர்கனைசேசன்   (www.ausbiotech.org/)
* மிஸௌரி பயோடெக்னாலஜி அசோசியேசன்   (www.mobio.org/)
* தி பயோஇண்டஸ்ட்ரி அசோசியேசன்   (www.bioindustry.org/)
*  இல்லினாய்ஸ் பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி
ஆர்கனைசேசன்   (www.ibio.org/)
* சொசைட்டி ஃபார் அப்ளைடு பயோடெக்னாலஜி   (www.sabt.org.in/)
* ஃபெடரேசன் ஆஃப் ஏசியன் பயோடெக் அசோசியேஷன்   (www.biofaba.org/)
* ஆல் இண்டியா பயோடெக் அசோசியேசன்   (www.aibaonline.com/) 
  உயிர்த் தொழில்நுட்பவியல் துறையில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசுகள் சில...
* பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் அவார்டு (www.chemheritage.org)
* கியோட்டோ பரிசு (www.inamorif.or.jp/index_e.html)
* ப்ரீஸ்ட்லி மெடல் (www.acs.org/)
* லாஸ்கர் பேசிக் மெடிக்கல் ரிசர்ச் அவார்டு (www.theaic.org/awardsgoldmedal.html)
* பெர்க்கின் மெடல் (www.chemheritage.org/)
* யு.எஸ் நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் (www.nsfgov/od/nms/medal.jsp)
* தி ஹீட்லி மெடல் (www.biochemistry.org/Awards/The Heatley Medal)
* கேலியன் ஃபவுண்டேஷன் அவார்டு (www.prixgalienusa.com/)
* தி சாண்ட்போர்டு ப்ளெமிங் அவார்டு (www.royalcanadianinstitute.ca/)
* ஓட்டோ வார்பர்க் மெடல் (www.ottowarburgmedal.org/) 

அடுத்த வாரம் புவி மற்றும் வளிமண்டல அறிவியல் (earth and atmospheric science) துறைகளில் உள்ள வாய்ப்புகளை அலசுவோம்.
மனிதனின் வாழ்க்கையையும்,
மற்ற உயிரினங்களின்
வாழ்க்கையையும் செம்மையுறச்
செய்யும் துறை

தொகுப்பு: வெ.நீலகண்டன்