வேலை ரெடி!



வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

இந்திய பாதுகாப்புத் துறை பணிகள்

நிறுவனம்: நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி (என்.டி.ஏ) மற்றும் நேவல் அகாடமி (என்.ஏ)
வேலை: ஆர்மி, நேவி மற்றும் ஏர் ஃபோர்ஸ் பணிகள்
காலியிடங்கள்: என்.டி.ஏ பணிகளுக்கு 320, என்.ஏ பணிகளுக்கு 55 என மொத்தம் 375. (என்.டி.ஏவில் உள்ள 320 வேலைகளில் ஆர்மிக்கு 208 இடங்களும், நேவிக்கு 42 இடங்களும், ஏர்ஃபோர்ஸுக்கு 70 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.)
அடிப்படைத் தகுதி: திருமணமாகாத ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: +2 (என்.ஏ-வுக்கு விண்ணப்பிப்பவர்கள் +2வில் இயற்பியல் மற்றும் கணிதம் எடுத்துப் படித்திருக்க வேண்டும்.)
தேர்வு நாள்: 20.4.14

தேர்வு முறை: எழுத்து, நேர்முகம், உடல் சோதனைகள் மற்றும் மருத்துவ சோதனைகள் அடங்கும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.upsc.gov.in
தொழிற்கல்வி நிறுவனத்தில் நான் - டீச்சிங் பணிகள்

நிறுவனம்: ரூர்கேலாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
வேலை: நான்-டீச்சிங் துறையில் டெபுடி லைப்ரேரியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், லைப்ரரி இன்ஃபர்மேஷன் அசிஸ்டன்ட், செக்ரட்டரி போன்ற ஒன்பது பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: 56
கல்வித் தகுதி: ஒவ்வொரு வேலைப் பிரிவுக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 17.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.nitrkl.ac.in

எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு சுரங்கத்துறை வேலை

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்
வேலை: கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் ட்ரெயினி
காலியிடங்கள்: 78. (மெக்கானிக்கல்-27, எலெக்ட்ரிக்கல்-21, மைனிங்-10, இன்ஸ்ட்ருமென்டேஷன்-9, சிவில்-8 மற்றும் கம்ப்யூட்டர்-3) (தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உண்டு)
அடிப்படைத் தகுதி: கேட் தேர்வில் தேர்ச்சியானவர்களே விண்ணப்பிக்க முடியும்
கல்வித் தகுதி: அந்தந்த துறை வேலைகளில் எஞ்சினியரிங் டிகிரி படித்திருக்க வேண்டும். அல்லது ஏ.எம்.ஐ.இ சான்றிதழ் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 20.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு:  www.nlcindia.com

அரசு இரும்பாலையில் வேலை

நிறுவனம்: செயில் என்றழைக்கப்படும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா
வேலை: டெக்னிக்கல் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் துறை சார்ந்த மேனேஜ்மென்ட் ட்ரெயினி (இ-1 கிரேட்)
காலியிடங்கள்: மொத்தம் 710. (டெக்னிக்கல் - 650, அட்மினிஸ்ட்ரேஷன் - 60)
கல்வித் தகுதி: டெக்னிக்கலுக்கு அந்தந்த துறைகளுக்கான எஞ்சினியரிங் டிகிரியில் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அட்மினிஸ்ட்ரேஷன் வேலைக்கு ஏதாவது டிகிரியுடன் அந்தந்த வேலைப் பிரிவுகளில் மேற்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் (தாழ்த்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோருக்கு வயது தளர்ச்சி உண்டு)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக
தகவல்களுக்கு: www.sail.co.in

பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணி

நிறுவனம்: தஞ்சையிலுள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
வேலை: புரொபசர், அசோசியேட் புரொபசர், அசிஸ்டென்ட் புரொபசர்
காலியிடங்கள்: மொத்தம் 77
கல்வித் தகுதி: முதுகலை, பி.எச்.டி போன்ற படிப்புகளுடன் அனுபவமும் தேவை.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.cutn.ac.in

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

நிறுவனம்: பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் எனப்படும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்
வேலை: கிரேட் 2 ஸ்டெனோகிராஃபர் மற்றும் லோயர் டிவிஷன் கிளார்க்
காலியிடங்கள்: மொத்தம் 43 (ஸ்டெனோகிராஃபர் - 7, லோயர் டிவிஷன் கிளார்க் - 36)
கல்வித் தகுதி: முதல் பணிக்கு +2 தகுதி மற்றும் டிக்டேஷன் மற்றும் ட்ரான்ஸ்கிரிப்ஷன் எழுதும் திறன் இருக்க வேண்டும். இரண்டாம் பணிக்கு +2 தேர்ச்சியோடு, டைப்பிங் தெரிந்திருத்தல் அவசியம்.
வயது வரம்பு: முதல் பணிக்கு 27, இரண்டாம் பணிக்கு 30 வயது மிகாது இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு உண்டு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 19.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு:  www.jipmer.edu.in

டிகிரி படித்தவர்களுக்கு பல்கலைக்கழகப் பணிகள்

நிறுவனம்: தஞ்சையிலுள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
வேலை: லைப்ரேரியன், இன்ஃபர்மேஷன் சயின்டிஸ்ட், சிஸ்டம் அனாலிஸ்ட், பிரைவேட் செகரட்டரி, கிளரிக்கல் போன்ற 21 துறைகளில் நான் டீச்சிங் பணிகள்
காலியிடங்கள்: மொத்தம் 53 (குறிப்பிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு)
கல்வித் தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப இளங்கலையிலிருந்து முதுகலை வரை தகுதி கோரப்படுகிறது. சில வேலைகளுக்கு அனுபவம், டெக்னிக்கல் திறன்களும் கேட்கப்பட்டிருக்கின்றன.
வயது வரம்பு: ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.cutn.ac.in

பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

நிறுவனம்: இந்திய ரயில்வே வேலை: இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான ஆர்.பி.எஃப் எனப்படும் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அதன் வேறு பிரிவுகளில் கான்ஸ்டபிள் வேலை. (வாட்டர்மேன், வாஷர்மேன், பார்பர், மெயில், சஃபாய்வாலா, டெய்லர், காப்ளர் என 7 பிரிவுகள்)
காலியிடங்கள்: 659 (குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடும் உண்டு)

வயது வரம்பு: 18லிருந்து 25 வயதுக்குள். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுத் தளர்ச்சி உண்டு.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அந்தந்த பணிகளுக்கான திறனும் அனுபவமும் தேவை. உயரம், மார்பளவு உள்ளிட்ட உடல் தகுதியும் கேட்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்து, உடல் தகுதி, தொழில் திறன் மற்றும் மருத்துவத் தேர்வு உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 27.1.14விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.indianrailways.gov.in

மருத்துவ ஆய்வுக் கழகத்தில் பணிகள்

நிறுவனம்: எய்ம்ஸ் டெல்லி.
வேலை: குரூப் பி மற்றும் சி பிரிவில் டயட்டீஷியன், ஸ்டோர் ஆபீசர், டெக்னீஷியன், ஜூனியர் எஞ்சினியர், சைக்காலஜிஸ்ட் போன்ற 17 பிரிவுகளில் பணிகள்
காலியிடங்கள்: சுமார் 245. இது அதிகரிக்கப்படலாம். இவற்றில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடும் உண்டு.
கல்வித் தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. இத்தோடு சில பிரிவுகளுக்கு அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பும் மாறும்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.1.14 விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் மேலதிக
தகவல்களுக்கு:  www.aiimsexams.org

நிகழ்த்துக் கலைஞர்களுக்கு அரசு வேலை

நிறுவனம்: மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறையின் கீழ் வரும் சாங் அண்ட் டிராமா டிவிஷன். (இதன் கிளை சென்னையிலும் உள்ளது.)
வேலை: கிராமிய இசை, நடனம், நாட்டியம், பொம்மலாட்டம் என கிராமம் சார்ந்த கலைகளில் தேர்ச்சியுள்ள குழுக்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: கிரேடு ஏ, பி, சி எனும் அடிப்படையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பணிகள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 21.1.14 விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு: www.sdd.nic.in

என்.சி.சி சான்றிதழ் இருந்தால் ராணுவத்தில் வேலை


நிறுவனம்: இந்திய ராணுவம்
வேலை: என்.சி.சி சான்றிதழ் உள்ளவர்களுக்கான ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையிலான வேலை. இதில் திருமணமான, திருமணமாகாத ஆண்களும், திருமணமாகாத பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: மொத்தம் 54 (ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 4) வயது வரம்பு: 19 முதல் 25க்குள் கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரியில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க
வேண்டும். மேலும், உடல் தகுதி, மருத்துவத் தகுதி போன்றவை எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு, உடல் தேர்வு, மருத்துவத் தேர்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.1.14
விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலதிக தகவல்களுக்கு:www.joinindianarmy.nic.in