கவிதைக்காரர்கள் வீதி
கடைசித்துளி
அருந்தப்படாமல் வீணாவதற்கெனவே காத்திருக்கிறது தேனீர் கோப்பைக்குள்ளிருக்கும் தேனீரின் கடைசித்துளி... - ராம், சென்னை.
ஏ.டி.எம்.
அம்மாவின் அரிசிப்பானையே எங்கள் குடும்ப ஏ.டி.எம். - சங்கீத சரவணன்,மயிலாடுதுறை.
மரம்
தாத்தா மரம் நட்டார் அப்பா அனுபவித்தார் நான் வெட்டி விட்டேன்! - மகிழை.சிவகார்த்தி,புறத்தாக்குடி.
ஆடை
நீரின் நிர்வாணம் மறைக்கின்றன ஆகாயத் தாமரைகள் - வீ.உதயக்குமாரன்,வீரன்வயல்.
கண்ணீர்
மணல் லாரியின் அடிப்புறத்தில் சொட்டுச் சொட்டாய் கசிகிறது நதியின் கண்ணீர். - வீ.விஷ்ணுகுமார்,கிருஷ்ணகிரி.
உபதேசம்
வானவில் வழங்கியது உபதேசம், ‘நிரந்தரமில்லாதது வாழ்க்கை!’ - மனோமணாளன்,கோவை.
துணை
நீச்சல் தெரியாதவனையும் கரை சேர்த்துவிடுகிறது மரண பயம்..! - தில்பாரதி, திருச்சி.
|