Jokes
கட்சி ஆபீஸ்ல பயங்கர கொசுத் தொல்லையாமே..?’’ ‘‘பின்னே... கூட்டணிக்காக கதவுகளைத் திறந்து வச்சா?’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
திடீர்னு சோடா கடையையும் அடிச்சு உடைக்கறாங்களே... ஏன்?’’ ‘‘மதுவோட பார்ட்னர்தானே அது... அதான்!’’ - ஜே.தனலட்சுமி, கோவை.
மதுக்கடையை பூட்டுற போராட்டத்துக்கு போன தலைவர் சோகமா வர்றாரே... ஏன்?’’ ‘‘போதை தெளிஞ்சு அவர் போறதுக்குள்ள கடைகளை ஊழியர்களே பூட்டிட்டாங்களாம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
ஸ்பீக்கரு...
‘‘2016ம் ஆண்டில் அரியணையில் ஏற நாட்களை எண்ணிக் கொண்டிருந்த தலைவரை அரெஸ்ட் செய்து ஜெயில் கம்பிகளை எண்ண வைத்து விட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
எதையும் சீக்கிரம் செஞ்சு முடிச்சுடணும்னு நினைக்கறவர் நம்ம தலைவர்...’’ ‘‘அதுக்காக ‘2015லேயே ஆட்சியைப் பிடிப்போம்’னு பேசறதா..?’’ - கே.ஆனந்தன், தர்மபுரி.
அந்த பத்தாம் நம்பர் பேஷன்ட்டை நர்ஸ் அடிச்சிட்டாங்களா... ஏன்?’’ ‘‘நான் உயிரோட இருக்கறப்பவே எதுக்கு வெள்ளை சேலை கட்டியிருக்கேன்னு கேட்டாராம்!’’ - சி.சாமிநாதன், கோயமுத்தூர்.
தத்துவம் மச்சி தத்துவம்
பைக் ஓட்டுனா ஹெல்மெட் போடணும். ஸ்கூட்டர் ஓட்டுனா ஹெல்மெட் போடணும். பேய் ஓட்டுனா ஹெல்மெட் போடணுமா? - கா.பசும்பொன், மதுரை.
‘‘என்ன கபாலி மாமூல்ல இருபது பர்சன்ட் பிடிச்சுக்கிட்டு தர்றே?’’ ‘‘ஆடிட்டிங் சார்ஜ் ஏட்டய்யா..!’’ - பா.ஜெயக்குமார், வந்தவாசி.
‘‘என்னாய்யா... கபாலி ரொம்ப மகிழ்ச்சியாக மாமூலை அள்ளி அள்ளித் தர்றான்?’’ ‘‘சூப்பர் ஸ்டார் அடுத்த படத்துக்கு அவனுடைய பேரை வச்சிட்டாராம்...’’ - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
‘‘ஜட்ஜ் ஏன் கோபப்படறார்..?’’ ‘‘30 வருஷமா கோர்ட்டுக்கு வந்து போயிட்டு இருக்கேன்னு சொல்லி கபாலி பாராட்டு விழா நடத்தச் சொல்லிக் கேட்டானாம்!’’ - பெ.பாண்டியன், காரைக்குடி.
ஹி... ஹி... கபாலி ஜோக்ஸ்!
‘‘ஏட்டய்யா, கபாலி எதுக்கு இப்போ வந்துட்டுப் போறான்..?’’ ‘‘எந்த தெருவுலே யார் யார் ஊருக்கு போயிருக்காங்கன்னு டீடெய்ல்ஸ் வேணுமாம்!’’ - எஸ்.சீனிவாசன், சென்னை-33.
‘‘என்னை வேற ஊருக்கு மாத்திட்டாங்க கபாலி...’’ ‘‘அதுக்கு நான் என்ன செய்யணும் இன்ஸ்பெக்டர் அய்யா?’’ ‘‘நீயும் என் கூடவே அந்த ஊருக்கு வந்துட்டா என் ‘மாமூல்’ வாழ்க்கை பாதிக்காது!’’ - சரவணன், கொளக்குடி.
‘‘போலீஸ் ஆசையை ஊட்டி பையனை வளர்க்கிறியாமே, கபாலி?’’ ‘‘கொடுத்த மாமூலையெல்லாம் வட்டியும் முதலுமா திருப்பி எடுக்க வேணாமா, ஏட்டய்யா?’’ - பி.ஜி.பி.இசக்கி, அம்பாசமுத்திரம்.
‘‘ஸ்டேஷன்ல எல்லா போலீசும் ஏன் கண்ணை கட்டிக்கிட்டு வேலை செய்யறாங்க..?’’ ‘‘கபாலியை கண்டதும் சுடச் சொல்லி வந்திருக்கற உத்தரவை நிறைவேற்ற யாருக்கும் மனதில்லையாம்... அதான்!’’ - சரவணன், கொளக்குடி.
|