நியூஸ் வே



*‘சிறுத்தை’ சிவாவின் படத்தையடுத்து, `பிரண்ட்ஸ்’ மாதிரி கலகலப்பான காமெடி, ஃபேமிலி சப்ஜெக்ட் ஒன்றில் நடிக்க விரும்புகிறார் அஜித். இதற்காக அந்தப் படத்தை இயக்கிய சித்திக்கையே மனதில் நினைத்திருக்கிறார்.

*எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் அனுஷ்கா, தமன்னா நடிக்கும் ‘பாகுபலி’ படத்தின் முதல் ட்ரெய்லரை இம்மாத இறுதியில் வெளியிடுகிறார்கள். இதில் அனுஷ்காவின் கேரக்டர் பெயர் தேவசேனா, தமன்னாவின் கேரக்டர் பெயர் அவந்திகா என்பதை மட்டும் இப்போது அறிவித்திருக்கிறார்
ராஜமௌலி.

*செல்வராகவன் படத்திற்குப் பெயர் வைத்துவிட்டார். சிம்பு, கேத்தரின் தெரஸா, டாப்ஸி நடிக்கும் இந்தப் படத்தின் பெயர் ‘கானகம்’. ஆச்சரியம், சென்னையில் கௌதம் மேனன் வீடு இருக்கும் ஏரியா பெயர் கூட ‘கானகம்’தான்!

 8 ஆண்டுகளாக தான் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரை விற்றிருக்கிறார் அன்னா ஹசாரே. ‘‘முதுகுவலியால் அவதிப்படுவதைத் தவிர்க்க சொகுசான காரில் போக வேண்டும்’’ என்ற டாக்டர்களின் அட்வைஸால் இந்த முடிவு. ஹசாரே பயன்படுத்திய கார் ரூ.9.11 லட்சத்துக்கு ஏலம் போயிருக்கிறது. அடுத்து அவருக்கு இனோவா
வாங்குகிறார்கள் அவரது சீடர்கள்.

நயன்தாரா, மம்முட்டி நடித்து ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படம் வெளியாகியிருக்கிறது. அவுட்டோர், சண்டைக் காட்சிகள், பெரிய உடல் உழைப்பு என எதுவும் அவசியமில்லாத படம். பெரும் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் ரைட்ஸ் வாங்கி, இரண்டே மாதத்தில் நடித்து முடித்து வெளியிட்டுவிடலாம் என நினைக்கிறார் ரஜினி. ரஞ்சித் படம் ஆரம்பித்த பிறகுதான் இந்த முயற்சியாம்.

*தமிழர்கள் பெருமிதம் கொள்ள இன்னொரு விஷயம், கயானா நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார் மோசஸ் நாகமுத்து என்ற தமிழர். 67 வயதாகும் நாகமுத்து, ஆசிரியர், பத்திரிகையாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் என பலமுகம் கொண்டவர். தென் அமெரிக்காவின் கரீபியன் கரையில் இருக்கும் இந்த நாட்டில் இந்தியர்கள் அதிகம் என்றாலும், தமிழர்கள் 3 சதவீதமே உள்ளனர். ஆப்ரிக்க இனத்தவரின் கட்சியுடன் கூட்டணி அமைத்து இதை சாதித்திருக்கிறார் நாகமுத்து.

*இந்தியாவில் கருணைக்கொலை பற்றிய விவாதத்தை ஆரம்பித்துவைத்த அருணா ஷன்பக் இந்த வாரம் மறைந்தார். மும்பையின் கே.இ.எம். மருத்துவமனையில் முறைகேட்டில் ஈடுபட்ட ஒரு ஊழியரைக் கண்டித்தபோது, அவர் அருணாவை பலாத்காரம் செய்து, கழுத்தை இரும்புச் சங்கிலியால் இறுக்கியதில், மூளைக்கு ஆக்சிஜன் செல்லாமல் கோமா நிலையை அடைந்தார். 42 ஆண்டுகளாக அருணாவை ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டனர் மருத்துவமனை ஊழியர்கள்.

 அருணாவை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்ற அவரது தோழி விரானி கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ‘மரண ஊசி போட்டு யாரையும் கருணைக்கொலை செய்வது கூடாது. ஆனால் சிகிச்சை மற்றும் செயற்கை சுவாசம் தருவதை நிறுத்தி, இயல்பாக மரணம் நிகழச் செய்யலாம்’ என்றது நீதிமன்றம். 42 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒரு தேதியில் உறைந்து போயிருந்த அருணாவின் நினைவுகள் நிரந்தரமாக இப்போது நின்றுவிட்டன. அவரை பாலியல் பலாத்காரம் செய்த சோஹன்லாலுக்கு, அந்தக் குற்றத்துக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பதுதான் இந்திய நீதியின் ஆகச்சிறந்த முரண்!

î‘உத்தமவில்லன்’ படத்துக்குப் பிறகு ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படம், ‘தூங்காவனம்’. ஐதராபாத்தில் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது. ‘‘இது த்ரில்லர் கதை. த்ரில்லர்னா பிசாசு இருக்கும்னு நினைச்சிடாதீங்க. மனிதர்களே பிசாசுகளுக்கு நிகரான வேலையைச் செய்கிறார்கள்’’ என்கிறார் கமல். இப்படத்தை கமலிடம் உதவியாளராக இருந்த ராஜேஷ் இயக்குகிறார்.

îபார்த்திபன் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். இனி எல்லா கேரக்டர்களையும் பிரபு மாதிரி ஏற்றுச் செய்ய முடிவு செய்துவிட்டார். விஜய் சேதுபதிக்குப் போட்டியான செம வில்லன் ரோலாம்.

îவிஷாலின் ‘பாயும் புலி’ ஷூட்டிங் காரைக்குடியில் பரபரக்கிறது. சம்மர் ஹாலிடே,
இந்திப் படம் என காஜல் அகர்வால் பிஸியாகிவிட, மீதம் உள்ள அவரது போர்ஷன் ஷூட் ஜூன் மாதம்தான் நடக்கிறது.

îசிரஞ்சீவியின் 150வது படம் முடிவாகிவிட்டது. நயன்தாராவும், அஞ்சலியும் அவருக்கு இரண்டு ஜோடிகள். சார்மி ஒரு அயிட்டம் சாங்குக்கு ஆடுகிறார். பூரி ஜெகநாத் டைரக்டர். இவ்வளவு மட்டுமே முடிவாகியிருக்கும் இந்தப் படத்தின் விற்பனை இப்போதே பல மடங்கு எகிறுகிறது!

î‘ஹீல்ஸ் அணியாத பெண்களை அனுமதிப்பதில்லை’ என்ற கேன்ஸ் திரைப்பட விழா விதிமுறை கடும் கண்டனங்களுக்கு ஆளாகியிருக்கிறது. ஆனாலும் வழக்கம்போல் ஐஸ்வர்யா ராய் உட்பட இந்தி நடிகைகள் இங்கு ரெட் கார்பெட்டில் அழகுநடை போட்டார்கள். ஐஸ்வர்யா நடிக்கும் `ஜஸ்பா’ இந்திப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இங்கு வெளியிட்டு அமர்க்களப்படுத்தினார் இயக்குநர் சஞ்சய் குப்தா. குடும்ப வாழ்க்கை, குழந்தைப்பேறு என ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் ஐஸுக்கு இன்னும் மவுசு குறையவில்ைல!

îஉயிரிழந்தவர்களுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தக்கூட 6 ஆண்டுகள் காத்திருக்க நேர்ந்தது. இலங்கையில் இப்போது நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தால், முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்குத் திரளாகக் கூடி அஞ்சலி செலுத்துவது சாத்தியமானது. முதல்முறையாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இந்தப் பொது நிகழ்வில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், ‘‘சாதகமான அரசியல் சூழ்நிலை இருக்கும்போதே தமிழர்களின் உரிமைகளைப் பெற வேண்டும்’’ என்று பேசினார்.

அதே நாளில் கொழும்பு நகரில் ராணுவ வீரர்களுக்கான அஞ்சலிக்கூட்டம் நடத்தி, ‘‘புதிய அதிபர் சிறீசேன, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’’ என குற்றம் சுமத்தினார் ராஜபக்‌ஷே. புலிகள் மீதான தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய சிறீசேன, ‘‘புலிகள் இயக்கத்தை மீண்டும் தலையெடுக்க விட மாட்டேன்’’ என கர்ஜித்தார். தமிழர்களை வைத்து மீண்டும் ஆரம்பிக்கிறது அரசியல்.

î‘வரலாற்றின் மிக சக்திவாய்ந்த செல்ஃபி’ என பெருமை பெற்றிருக்கிறது, சீனப் பிரதமர் லீ கேகியாங்குடன் மோடி எடுத்துக்கொண்ட செல்ஃபி. பெய்ஜிங்கில் ஹெவன் ஆலயத்தில் எடுக்கப்பட்ட இந்த செல்ஃபியை மோடியின் சீன வெய்போ சமூக வலைத்தளத்தில் சுமார் 3 கோடியே 20 லட்சம் சீனர்கள் பார்த்திருக்கிறார்கள். அதோடு, ‘ஊர் திரும்பிய பிறகும் எங்களோடு தொடர்பில் இருங்கள்’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.