Like and Share



அண்ணே ஒரு விளம்பரம்...

கடைத்தெருவில் ஒரு பெண்ணிடம் வம்பு பண்ணி, உரசி இம்சை செய்யும் பையன்... யாரும் வீட்டில் இல்லாத நேரம், குழந்தைக்கு ஊட்ட வேண்டிய உணவை போக்கு காட்டி, தானே கொட்டிக்கொள்ளும் ஆயா... ஜூனியர்களை ராக்கிங் செய்து ரணகளப்படுத்தும் மாணவர்கள்... இவர்கள் எல்லாம் சி.சி.டி.வி கேமரா தங்களைக் கண்காணிப்பது தெரிந்ததும் பம்மிப் பதுங்குவதுதான் விளம்பரம். சி.பி ப்ளஸ் எனும் கண்காணிப்பு கேமரா நிறுவனம் இதை மூன்று தனித்தனி விளம்பரங்களாகத் தயாரித்திருக்கிறது.

ஹிந்தியில் ‘ஊப்பர் வாலா’ என்பது ‘மேலே இருப்பவன்’ என்ற அர்த்தத்தில் கடவுளைக் குறிக்கும். அந்த ‘ஊப்பர் வாலா’ கடவுளாக இங்கே கேமராவை நிலை நிறுத்தி, ‘மேல இருக்கவன் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருக்கான்’ என்பது கலக்கல் ஸ்மார்ட் டயலாக்! தமிழில் இதை எப்படித் தருவார்களோ!

அப்பா‘டெக்’கர்

இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் மொபைல் நம்பரை டயல் செய்ய வேண்டும் என்றால், நம்பருக்கு முன்பு 0 அல்லது +91 சேர்க்க வேண்டும் என விதி இருந்தது. சேர்க்கா விட்டால் டொயிங் டொயிங் என பீப் சத்தம் நம் பி.பீயை கூட்டும். இனி, அந்தத் தொல்லையே இல்லை. முழுமையான மொபைல் நம்பர் போர்ட்டபிளிட்டி அமல்படுத்தப்பட்டால் இந்தியாவுக்குள் எந்த மொபைல் நம்பருக்கும் ஜீரோ தேவையில்லை.

 எல்லா மொபைல் ஆபரேட்டர்களும் இதை மே 3ம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் எனக் கெடு விதித்திருந்தது நமது தொலைத்தொடர்புத் துறை. ஏர்டெல், வோடஃபோன், MTNL போன்ற சில ஆபரேட்டர்கள் இதை அமல்படுத்திவிட்டார்கள். மற்றவர்களும் வரும் ஜூலைக்குள் அமல்படுத்திவிடுவார்களாம். அதன்பின் மொபைல் நம்பரில் இந்தியா முழுக்க ஒன்றுதான்!

யூத் tube

லவ் புட்டுக்கொண்ட பிறகு பொண்ணுங்க ரீயாக்‌ஷன் எப்படியிருக்கும்? அவன் ‘ராஸ்கல்’, ‘பொறுக்கி’, ‘மோசமானவன்’, அவனை... ‘கட்’ பண்ணிடணும் என டபுள் மீனிங்கில் திட்டுவார்கள். நான் குண்டாயிட்டனா? என சுயபரிசோதனை செய்வார்கள். அவன் மேல் இருக்கும் கோபத்தில் போனைத் தூக்கியெறிந்துவிட்டு, மறுநொடியே அதை எடுத்து வைத்து ஆன் ஆகிறதா எனப் பார்ப்பார்கள்.

‘அவ்வளவுதான்... இனி அவனை நினைக்கவே போறதில்ல’ எனச் சொல்லிவிட்டு தண்ணீர் குடிக்கும்போது ‘இது அவனுக்கு ரொம்பப் பிடிக்கும்’ என ஃபீலிங் விடுவார்கள். ‘எனக்கு இந்தக் காதல் மேலல்லாம் நம்பிக்கையே இல்ல...’ எனச் சொல்லிக் கொண்டு தோழியின் ஒரு மாத லவ் ஆனிவர்சரி(!!)யை பொறாமையோடு பார்ப்பார்கள்.இத்தனையையும் நம் கண்முன்னே செய்து காட்டி ரசிக்க வைக்கிறது ‘ஃபேம் காமெடி’ எனும் யூ டியூப் சேனல். கடைசியாக ப்ரேக்கப் சமயத்தில் பையன்கள் எப்படி இருப்பார்கள் என்றும் அதே பெண் செய்து காட்டி கலாய்ப்பது, லேடி ஆடியன்ஸையும் பேலன்ஸ் செய்கிறது. இதனால்தான் கிட்டத்தட்ட 20 லட்சம் ஹிட்ஸ் கிடைத்திருக்குமோ!

செல்(ஃபி)வாக்கு!

‘தலை’க்கு தங்கச்சி... ஸோ,
ஹோம்லி ஆயாச்சி!