‘‘தலைவர் சினிமாவில் நடிக்கப் போறாரா... ஏன்?’’
‘‘நம்ம கட்சிக்கு நட்சத்திரப் பேச்சாளர்னு யாரும் இல்லையாம்... அதான்!’’
- அதிரை புகாரி,
அதிராம்பட்டினம்.
‘‘நீங்க தந்த தூக்க மாத்திரையை சாப்பிட்ட பிறகு சதா நர்ஸ் நினைப்புதான் டாக்டர்...’’
‘‘ஞாபகமறதியா ‘ஏக்க’ மாத்திரை தந்துட்டேன் போல!’’
- அம்பை தேவா,
சென்னை-116.
‘‘திருடினவன் வேற என்ன செய்தான். சும்மாவா போனான்..?’’
‘‘இல்லை. எங்களோட சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கிட்டுத்தான் போனான்!’’
- பெ.பாண்டியன்,
கீழசிவல்பட்டி.
தத்துவம் மச்சி தத்துவம்
பீச்சுல கடலை போட்டா லவ்னு சொல்றோம்; தியேட்டர்ல கடலை போட்டா டைம்பாஸ்னு சொல்றோம்; ஆபீஸ்ல கடலை போட்டா
ஜொள்ளுன்னு சொல்றோம். ஆனா, தோட்டத்தில கடலை போட்டா அதை மட்டும் ஏன் விவசாயம்னு சொல்றாங்க?
- ஜி.தாரணி, அரசரடி.
‘‘தலைவரே! உங்க மீட்டிங்குக்கு அனுமதி தர்றதுக்கு போலீஸ் ஒரே ஒரு
கண்டிஷன் போடுது...’’
‘‘என்னய்யா அது..?’’
‘‘குறைஞ்சது நாலு பேராவது மைதானத்தில் இருக்கணுமாம்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு.
தத்துவம் மச்சி தத்துவம்
என்னதான் முட்டையில
‘மஞ்சள்’ கரு இருந்தாலும், அந்த மஞ்சளை எடுத்து முகத்துக்குப் பூசி குளிக்க முடியுமா?
- மஞ்சள் அழகிகள் பினனால் திரியும் மஞ்ச மாக்கான்கள் சங்கம்
- வி.சகிதா முருகன்,
தூத்துக்குடி.
‘‘என்ன மாப்பிள்ளை இது! பொண்ணு பார்க்க தனியா
வந்திருக்கீங்க?’’
‘‘முதல் மனைவியைக் கூட்டிக்கிட்டு வந்தா நீங்க பொண்ணு
தர மாட்டீங்களே...’’
- சரவணன்,
கொளக்குடி.